பாதிக்கு பாதி விலை.. 200 இன்ச்.. 8ஜிபி மெமரி.. பிளிப்கார்ட் உச்சக்கட்ட ஆபரில் Portronics புரொஜெக்டர்..
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 (Portronics Beem 300) புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட், ஆண்ட்ராய்டு இயங்குதளம், 8 ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் மாடல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது இந்த புரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13249 விலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 300 அம்சங்கள் (Portronics Beem 300 Specifications): அதாவது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் ஆனது 1920X1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 30,000 லுமன்ஸ் எல்இடி லேம்ப் அவுட்புட் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), எல்இடி 250 லுமன்ஸ் ப்ரைட் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதாவது இந்த புரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
அதன்படி எச்டிஎம்ஐ போர்ட், ஏயூஎக்ஸ்(AUX), யூஎஸ்பி (USB) போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10W இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டு வெளிவந்துள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 என்ற எல்இடி புரொஜெக்டர் மாடல்.
இதுதவிர ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) இதில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது. குறிப்பாக லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை இந்த புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 எல்இடி புரொஜெக்டர் மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புரொஜெக்டரில் 50 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது.
அதேபோல; நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல். எனவே கம்மி விலையில் இந்த புரொஜெக்டர் மாடல் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








