Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபர் ரேட்ல 55 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 48W ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 55 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, 48W அவுட்புட் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஆஃபர் விலைக்கு 55 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவி (55 inch MOTOROLA QLED TV) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், மீடியாடெக் சிப்செட், 2 ஜிபி ரேம் போன்ற யுஐ மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்களிலும் டிவி பிரியர்களை தட்டித்தூக்குகிறது. இந்த டிவியின் விவரங்கள் இதோ.

55 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவி அம்சங்கள் (55 inch MOTOROLA QLED TV Specifications): இந்த டிவி பட்ஜெட்டில் கிடைத்தாலும், டிஸ்பிளே பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன. ஆகவே, 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, 4K வீடியோ அவுட்புட் மற்றும் எச்டிஆர் (HDR) கிடைக்கிறது.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபர் ரேட்ல 55 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே மாடல்!

இந்த டிஸ்பிளேவில் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இதுபோக டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10) மற்றும் பிரீமியம் கலர் அக்கியூரசி கொடுக்க 1.07 பில்லியன் கலர் டெப்த் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கேமிங் எக்ஸ் மோட் (Game X Mode) கிடைக்கிறது. இதுபோக பல்வேறு கேமிங் பீச்சர்கள் உள்ளன.

ஆகவே, எம்ஈஎம்சி (MEMC) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) போன்ற கேமிங் லேட்டன்சி மற்றும் மோஷன் கன்ட்ரோல்டு பீச்சர்களை பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப பிரீமியமான ஆடியோ பீச்சர்களும் கிடைக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் சினிமாடிக் சவுண்ட் (Cinematic Sound) சப்போர்ட் கிடைக்கிறது. 48W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகிறது.

2 ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. விவிட், கேம், மூவி, எனர்ஜி சேவிங் போன்ற ஆடியோ மோட்களை இந்த அவுட்டில் எடுத்து கொள்ளலாம். லேட்டஸ்ட் கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0) கிடைக்கிறது. குவாட் கோர் மீடியாடெக் (Quad Core Mediatek) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கிறது. இது பிரீமியம் டிவிகளில் கிடைக்கும் பீச்சர்களாகும்.

கூகுள் டிவி ஓஎஸ் 5.0 மூலம் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecasr), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் கூகுள் டிவி ஆப் (Google TV App) உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. இதில் கூகுள் டிவி ஆப் மூலம் ஸ்மார்ட்போனை ரிமோட்டாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) யுஐ கிடைக்கும்.

ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், மோஷன் என்ஹான்ஸ்மென்ட் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ஹெட்போன் ஜாக், மினி ஏவி, 3 எச்டிஎம்ஐ, 2 யுஎஸ்பி, எல்ஏஎன், ஆப்டிகல் மற்றும் ஆர்எப் போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்களை பெற்று கொள்ளலாம். பில்ட்-இன் வை-பை, ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. இப்போது, விலை விவரங்களை பார்ப்போம்.

55 இன்ச் மோட்டோரோலா கியூஎல்இடி டிவி விலை (55 inch MOTOROLA QLED TV Price): இந்த டிவியின் விலை 50 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.31,999ஆக இருக்கிறது. இதுபோக பிளிப்கார்ட் தளத்தில் கனரா பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 Percent Discount on 55 inch MOTOROLA QLED TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X