பிச்சிக்குது ஆர்டர்.. 50 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 24W சவுண்ட் அவுட்புட்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு 43 இன்ச் விடபுள்யூ ஸ்பெக்ட்ரா சீரிஸ் டிவி (43 inch VW Spectra Series TV) கிடைக்கிறது. பாதிக்குப்பாதி விலையில் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த டிவியின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
50 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.14,999 விலைக்கு இந்த 43 இன்ச் விடபுள்யூ ஸ்பெக்ட்ரா சீரிஸ் டிவி வாங்கி கொள்ள கிடைக்கிறது. எந்தவொரு பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,499 விலைக்கு இந்த டிவியை வாங்கி கொள்ளலாம். மேலும், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

43 இன்ச் விடபுள்யூ ஸ்பெக்ட்ரா சீரிஸ் டிவி அம்சங்கள் (43 inch VW Spectra Series TV Specifications): இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் டிவியில் 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே (QLED Display) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே ஃபுல் எச்டி (Full HD) ரெசொலூஷன் சப்போர்ட் உடன் வருகிறது.
அதேபோல, 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான வீடியோ, திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்ற வகையில் இந்த டிவி இருக்கிறது. இதுதவிர, ஐபிஇ டெக்னாலஜி (IPE Technology) இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், ட்ரூ டிஸ்பிளே (True Display), குவாண்டம் லுசென்ட் (Quantum Lucent), சினிமா ஜூம் (Cinema Zoom) மற்றும் 16.7 மில்லியன் கலர்கள் (Million Colours) சப்போர்ட் உள்ளிட்ட வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனுடன் எச்டிஆர் 10 (HDR 10) வசதியும் கிடைக்கிறது. இதனால் படங்களை பார்க்கும்போது நிறங்கள் மற்றும் காட்சிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையிலான அம்சங்களை இந்த டிவி வழங்குகிறது. சாஃப்ட்வேர் பிரிவை பொறுத்தவரை, இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் கியூஎல்இடி டிவி ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) மூலம் இயங்குகிறது. இதனால் பயனர்கள் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (Jio Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இதில் கிடைக்கின்றன.
இதுதவிர, பிசி கனெக்டிவிட்டி (PC Connectivity), பிளேவால் (Playwall) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) உள்ளிட்ட வசதிகளும் இந்த டிவியில் உள்ளன. மேலும், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் உள்ள உள்ளடக்கங்களை டிவி திரையில் பார்க்கும் வசதியும் கிடைக்கிறது. ஆடியோவை பொறுத்தவரை, விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் டிவி 24W சவுண்ட் அவுட்புட் உடன் வருகிறது. மேலும், ஸ்டீரியோ சரவுண்ட் சவுண்ட் (Stereo Surround Sound) மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speakers) வழங்கப்பட்டுள்ளன.
இதனுடன் மொத்தம் 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) இடம்பெற்றுள்ளதால், பயனர்கள் தங்களுக்கு ஏற்ற ஆடியோ அனுபவத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். கனெக்டிவிட்டி பிரிவில் வை-ஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) போன்ற முக்கிய வசதிகள் உள்ளன. மேலும், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் செட்-டாப் பாக்ஸ், கேமிங் டிவைஸ்கள், லேப்டாப் மற்றும் பென் டிரைவ் போன்ற பல்வேறு சாதனங்களை டிவியுடன் இணைக்க முடியும்.
இதனுடன் ஜியோஹாஸ்டார் (Jio Hotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான ஹாட் கீகள் கொண்ட ரிமோட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) வசதி இடம்பெறவில்லை. மொத்தத்தில், பட்ஜெட் விலையில் பெரிய திரை, கியூஎல்இடி டிஸ்பிளே, ஓடிடி சப்போர்ட் மற்றும் 24W ஆடியோ உள்ளிட்ட அம்சங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த விடபுள்யூ 43 இன்ச் ஸ்பெக்ட்ரா சீரிஸ் கியூஎல்இடி ஆண்ட்ராய்டு டிவி ஒரு ஆப்ஷனாக உள்ளது.


Click it and Unblock the Notifications
