Home
Gadgets

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.24,999-க்கு 50 இன்ச் TQLED டிவி.. 40W ஆடியோ.. டால்பி டிஜிட்டல் பிளஸ்.. எந்த மாடல்?

பெசல்-லெஸ் டிசைன் மட்டுமல்லாமல் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், 40W ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களை கொண்ட 50 இன்ச் தாம்சன் ஓபி மேக்ஸ் டிவி (50 inch Thomson OP MAX TV) இப்போது, பிளிப்கார்ட்விற்பனையில் (Flipkart Sale) அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த தாம்சன் டிவியின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறதா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

43 இன்ச் டிவிகளே இப்போது ரூ.20000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. இதனால், கூடுதலாக கொஞ்சம் பணம் போட்டால் 50 இன்ச் டிவி வாங்கலாமே என்று பல கஸ்டமர்கள் திட்டமிட்டிருப்பார்கள். இப்படியான கஸ்டமர்களுக்கு ரூ.25000 பட்ஜெட்டுக்குள் பக்கா பீச்சர்களுடன் தாம்சன் நிறுவனத்தின் ஓபி மேக்ஸ் சீரிஸ் (OP MAX Series) டிவி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.24,999-க்கு 50 இன்ச் TQLED டிவி.. மாடல்?

50 இன்ச் தாம்சன் ஓபி மேக்ஸ் டிவி அம்சங்கள் (50 inch Thomson OP MAX TV Specifications): இந்த தாம்சன் டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் லூமினோசிட்டி என்ஹான்ஸ்மெண்ட், கட்டிங் எட்ஜ் பேக்லைட்னிங் மற்றும் டீப் கான்ட்ராஸ்ட் சப்போர்ட் கொடுக்க டிகியூஎல்இடி (TQLED) டெக்னாலஜி கிடைக்கிறது.

இந்த டெக்னாலஜி மூலம் பிரீமியம் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். பெசல்-லெஸ் டிசைனில் ஐபிஎஸ் பேனல் (IPS Panel) கொண்டிருக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது. மேலும், 4K ரெசொலூஷன் கிடைக்கிறது.

இந்த 50 இன்ச் தாம்சன் ஓபி மேக்ஸ் டிவியில் 40W ஆடியோ அவுட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆடியேவுக்கு டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) மற்றும் டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) சப்போர்ட் கிடைக்கிறது. கேம் மோட், மூவி மோட், ஸ்போர்ட்ஸ் மோட், மியூசிக் மோட் போன்ற மோட்களும் கிடைக்கின்றன.

டிஸ்பிளேவிலும் விவிட், மூவி, ஸ்போர்ட்ஸ் போன்ற மோட்கள் வருகின்றன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட குவாட் கோட் மீடியாடெக் (Quad Core MediaTec) சிப்செட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு அவுட்புட் கொடுக்க மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த 50 இன்ச் தாம்சன் ஓபி மேக்ஸ் டிவி 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் ஓஎஸ் கிடைப்பதால், இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistan), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode) மற்றும் கூகுள் டியோ (Google Duo) போன்ற ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது.

50 இன்ச் தாம்சன் ஓபி மேக்ஸ் டிவி பிளிப்கார்ட் (50 inch Thomson OP MAX TV Flipkart): மேற்கண்ட் பீச்சர்களுடன் 40 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.24,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ப்ளூடூத், வை-பை போன்ற கனெக்டிவிட்டிகள் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 inch Thomson OP MAX TV With Dolby Digital Plus Sale Under Rs 25000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X