Home
Gadgets

வீட்டுக்கொரு 50 இன்ச் TV.. ரூ.4,250 டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.22,749-க்கு வருது.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

இதுக்கு கம்மி கிடைக்காது ப்ரோ என்று அடித்து சொல்லும்படி ரூ.4,250 டிஸ்கவுண்ட் போக அடிமட்ட விலைக்கு 50 இன்ச் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் டிவி (50 Inch Acer G Plus Series TV) விற்பனைக்கு வந்துள்ளது. 4K ரெசொலூஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பக்கா பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த டிவியின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்களை பார்ப்போம்.

50 இன்ச் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் டிவி அம்சங்கள் (50 Inch Acer G Plus Series TV Specifications): இந்த ஏசர் டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், அல்ட்ரா எச்டி (Ultra HD) டெக்னாலஜி மற்றும் 4K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஃபிரேம்லெஸ் டிசைன் (Frameless Design) கிடைக்கிறது.

வீட்டுக்கொரு 50 இன்ச்  TV.. ரூ.4,250 டிஸ்கவுண்ட்.. ரூ.22,749 பட்ஜெட்!

மேலும், இன்டலிஜென்ட் ஃப்ரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine), எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, கலர் அக்கியூரசி மற்றும் வேரியேஷன் மிட்-பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி எதிர்பார்க்கலாம். இந்த ஏசர் டிவியில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.

30W அவுட்புட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ55 (Quad Core Cortex A55) சிப்செட் வருகிறது. கூகுள் ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in) வருகிறது.

இதுபோக நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்களை கொடுக்கும்படி கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 50 இன்ச் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் டிவியில் 2 ஜிபி ரேம் மற்றம் 16 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோக்களை ஸ்டோர் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி பீச்சர்கள் கிடைக்கிறது. அதேபோல எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி போர்ட் மற்றும் எல்ஏன் போர்ட் கிடைக்கிறது. இந்த 50 இன்ச் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் டிவிக்கு 2 வருடங்களுக்கு வாரண்டி கொடுக்கப்படுகிறது.

பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.26,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.4,250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.22,749 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஆக்சிஸ் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். மற்ற கார்டுகளுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

43 இன்ச் டிவியை விட கொஞ்சம் பெரிய டிஸ்பிளே கொண்ட டிவி வேண்டுமானால், 50 இன்ச் டிஸ்பிளேவுடன் கிடைக்கும் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் டிவி மாடலுக்கு செல்லலாம். பிரீமியம் டிஸ்பிளே மற்றும் ஆடியோ அனுபவம் பட்ஜெட் விலையில் உங்களுக்கு கிடைக்கும். இந்த பட்ஜெட்டுக்கு மற்ற பிரீமியம் பிராண்ட்களில் 43 இன்ச் டிவிகள் மட்டுமே கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
50 inch Acer G Plus Series TV Sale Under Rs 23000 in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X