Home
Gadgets

Samsung TV-களுக்கு அடிமேல் அடி.. வீட்டுக்கு 1 வாங்கும் விலைக்கு 50, 55, 65, 75-இன்ச் Haier டிவிகள் அறிமுகம்!

ஹையர் (Haier) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய எச்க்யூஎல்இடி பி7 ப்ரோ ஸ்மார்ட் டிவி சீரீஸை (HQLED P7 Pro Smart TV Series) அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் (Samsung) மற்றும் ஹைசென்ஸ் (Hisense) ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பெரிய ஸ்க்ரீன் இவை மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வேகத்தில் ஹையர் பிராண்டின் இந்த டிவிகள் வந்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹையர் எச்க்யூஎல்இடி பி7 ப்ரோ ஸ்மார்ட் டிவி சீரீஸின் கீழ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஆகிய ஸ்க்ரீன் சைஸ்களில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எங்கு வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

வீட்டுக்கு 1 வாங்கும் விலைக்கு 50, 55, 65, 75-இன்ச் Haier டிவிகள்!

இந்தியாவில் ஹையர் எச்க்யூஎல்இடி பி7 ப்ரோ ஸ்மார்ட் டிவி சீரீஸ் விற்பனை: ஹையர் நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸ் ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி சில்லறை விற்பனை கடைகளிலும் (Retail stores) வாங்க கிடைக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹையர் எச்க்யூஎல்இடி பி7 ப்ரோ ஸ்மார்ட் டிவி சீரீஸ் விலை: 43-இன்ச் மாடலின் விலை ரூ.35,990 என்றும், 50-இன்ச் மாடலின் விலை ரூ.43,490 என்றும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்களின் விலைகள் முறையே ரூ.49,990, ரூ.67,990 மற்றும் ரூ.90,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாடல்களுக்கும் 3 வருட உத்தரவாதத்தை வழங்குவதாக ஹையர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்க்யூஎல்இடி பி7 ப்ரோ ஸ்மார்ட் டிவி சீரீஸின் முக்கிய அம்சங்கள்:
- ஹையர் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான HQLED டிஸ்பிளே தொழில்நுட்ம்
- 93 சதவீதம் வரையிலான DCI-P3 கலர் கேமட்
- 55-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான மாடல்களில் Dolby Vision மற்றும் HDR10+ டிஸ்பிளே டெக்னாலஜி
- கண் சோர்வை குறைப்பதாக கூறப்படும் TÜV Rheinland சான்றிதழ் பெற்ற Low Blue Light டெக்னாலஜி

- கேமர்களுக்காக 120Hz Dual Line Gate (DLG), Motion Estimation and Motion Compensation (MEMC), Variable Refresh Rate (VRR) மற்றும் Auto Low Latency Mode (ALLM) போன்ற கேமிங் அம்சங்கள்
- 2.1-சேனல் ஸ்பீக்கர் அமைப்புடன் கூடிய 50W சவுண்ட் சிஸ்டம்
- 55-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான மாடல்களில் ஒருங்கிணைந்த சப்-வூஃபர் (subwoofer)
- சவுண்ட் சிஸ்டமில் Dolby Atmos மற்றும் Total Sonics டெக்னாலஜி

- கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)
- AI Colour Boost, AI Motion மற்றும் AI Noise Reduction உள்ளிட்ட பல ஏஐ அடிப்படையிலான அம்சங்கள்
- 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- HaiCast ஸ்கிரீன் மிரரிங் வசதி
- Bluetooth 5.1 மற்றும் Wi-Fi ஆதரவு
- ஆடியோவை ஒலிக்க செய்ய டிவியை ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கராக பயன்படுத்த அனுமதிக்கும் 'Bluetooth Speaker Mode அம்சம்

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் 2026 விஷன் ஏஐ டிவி மாடல்களின் விலைகள்: சாம்சங்கின் இந்த புதிய டிவி சீரிஸின் கீழ் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.

சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ஹைசென்ஸ் (Hisense) நிறுவனத்தின் இ8எஸ் யுஎல்இடி மினி-எல்இடி டிவி சீரீஸ் (E8S ULED Mini-LED டவ Series): 55-இன்ச் மாடலின் விலை ரூ.57,990 என்றும், 65-இன்ச் மாடலின் விலை ரூ.76,990 என்றும், 75-இன்ச் மாடலின் விலை ரூ.99,990 என்றும் மற்றும் 85-இன்ச் மாடலின் விலை ரூ.1,59,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாடல்களும் அமேசான், பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
50 inch 55 inch 65 inch 75 inch New Haier HQLED P7 Pro Smart TV Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X