Home
Gadgets

ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.899-க்கு 50 மணி நேர பிளேபேக்.. Flipkart-ல் செம்ம டிமாண்ட் ஆகும் புதிய TWS இயர்பட்ஸ்!

ரூ.2000 அல்லது ரூ.5000 க்கு மேலான பட்ஜெட்டில் இயர்பட்ஸை வாங்க விருப்பம் இல்லாதவர்களை குறிவைத்து, உள்நாட்டு நிறுவனமான பிட்ரான் (Ptron) ரூ.899 க்கு 50 மணி நேரம் பிளேபேக்கை வழங்கும் புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை (True Wireless Stereo Earbuds) அறிமுகம் செய்துள்ளது.

நாம் இங்கே பேசுவது பிட்ரான் பாஸ்பாட்ஸ் என்கோர் (Ptron Basspods Encore) இயர்பட்ஸை பற்றித்தான். பிட்ரானின் இந்த புதிய டிடபுள்யூஎஸ் (TWS) இயர்பட்ஸில் 50 மணி நேர பிளேபேக் மட்டுமே முக்கிய அம்சமா என்று கேட்டால்.. இல்லவே இல்லை! ரூ.900 க்கு இதற்கு மேல் வேறு என்ன வேண்டுமென்று கேட்குமளவிற்கு நல்ல-நல்ல அம்சங்களை வழங்குகிறது!

வெறும் ரூ.899 க்கு 50 மணி நேர பிளேபேக்கை வழங்கும் TWS இயர்பட்ஸ்!

பிட்ரான் பாஸ்பாட்ஸ் என்கோர் இயர்பட்ஸ் விரிவான அம்சங்கள்: பிட்ரானின் இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது 10மிமீ டைனமிக் ட்ரைவர்ஸ் உடன் வருகின்றன. இது அதிவேகமான ஸ்டீரியோ சவுண்ட் மற்றும் ஆழமான பாஸை வழங்குவதாக பிட்ரான் கூறுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷனை (Noise Cancellation) வழங்கும் ட்ரூடாக் தொழில்நுட்பத்துடன் (TruTalk Technology) வருகிறது.

ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உடன் வரும் இந்த பிட்ரான் பாஸ்பாட்ஸ் 10மீ வரையிலான ஸ்டாண்டர்ட் வயர்லெஸ் கனெக்டிவிட்டியை வழங்குகின்றன. பிட்ரான் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 50 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும் மற்றும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒவ்வொரு இயர்பட்டும் 10 மணிநேரம் வரை பேட்டரியை வழங்கும்.

இந்த இயர்பட்ஸ் யூஎச்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன. பிட்ரான் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இயர்பட்ஸை சார்ஜ் செய்ய ஒரு மணிநேரமும், கேஸை சார்ஜ் செய்ய சுமார் 1.5 மணிநேரமும் ஆகும். இதை வெறுமனே 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 200 நிமிட பிளேபேக்கை வழங்கும்.

சுவாரசியமாக பிட்ரான் பாஸ்பாட்ஸ் என்கோர் இயர்பட்ஸானது ஐபிஎக்ஸ்4 ரேட்டிங்கையும் (IPX4 Rating) கொண்டுள்ளது மற்றும் இது ஸ்டீரியோ கால்களுக்கான குவாட் மைக் (Quad Mic) உடன் வருகிறது. மேலும் இதில் பிளே, பாஸ், நெக்ஸ்ட் ட்ராக், ப்ரீவியஸ் ட்ராக், கால் ஆன்சர், கால் ஹேங்கப், கால் ரிஜெக்ட் மற்றும் எனேபிள் வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற டச் கண்ட்ரோல்களும் உள்ளன.

பிட்ரானின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் லைட்வெயிட் டிசைனை (Light Weight Design) பெற்றுள்ளது. இதன் ஒவ்வொரு இயர்பட்ஸும் 4.5 கிராம் எடை உள்ளவையாக இருக்கின்றன. மறுகையில் உள்ள சார்ஜிங் கேஸ் 44 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது. கடைசியாக, பிட்ரான் பாஸ்பாட்ஸ் என்கோர் இயர்பட்ஸ் 1 வருட உள்நாட்டு உத்தரவாதத்துடன் (Domestic Warranty) வருகிறது.

பிட்ரான் பாஸ்பாட்ஸ் என்கோர் விலை மற்றும் விற்பனை: பிட்ரானின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ், பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ.899 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் பிட்ரானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இது ரூ.1599 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதை வாங்க விரும்புபவர்கள் பிளிப்கார்ட்-ஐ அணுகவும். கடைசியாக இது பிளாக், ப்ளூ மற்றும் க்ரே என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்கப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
50 Hours Battery Life For Just Rs 899 Ptron Basspods Encore TWS Earbuds Flipkart Sale Started
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X