தற்செயலாக ஸ்மார்ட்போனை நீங்களே சேதப்படுத்திக்கொள்வது எப்படி.?

Written By:

ஸ்மார்ட் சாதனங்களும், இண்டர்நெட்டும் சேர்ந்து நாம் எப்படி இணைப்புடன் வாழ்கிறோம் என்ற முறையையே மாற்றி அமைத்து விட்டன என்றே கூறலாம். மேலும் இந்த தள்ளுமுள்ளுகள் நிறைந்த அவசர அவசரமாய் வாழும் நவீன காலத்திற்கு ஸ்மார்ட்போன்கள் அன்றாடம் தேவைப்படும் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது.

அப்படியாக, பெரும்பாலும் நம் கைகளிலேயே இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தவறி கீழே விழுந்தால் மட்டுமே தான் நம்மால் ஆன பாதிப்புகளை கருவியின் மீது திணிக்கிறோம் என்றும், அது மட்டும் தான் உங்களின் ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் செய்யும் ஒரே கெடுதல் என்றும் நீங்கள் நினைத்தால் அது தவறு.

உங்களுக்கு தெரியாமலேயே தற்செயலாக உங்கள் ஸ்மார்ட்போனை நீங்களே சேதப்படுத்திக்கொள்ள 4 விடயங்கள் உள்ளன, அவைகள் என்ன என்பதை அறிந்துக்கொண்டு, தவிர்க்க பாருங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மால்வேர் இன்ஸ்டால்

மால்வேர் இன்ஸ்டால்

கண்டபடி ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்வதால் உங்கள் சாதனத்தில் தீம்பொருள் (மால்வேர்) நுழைய அதிக வழி உள்ளது. பொதுவாக, தீம்பொருள் ஆனது ஒரு பயன்பாட்டின் மூலம் உங்கள் மொபைலுக்கு நுழைகிறது, நீங்கள் மூன்றாம் தரப்பு அல்லது சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்களில் இருந்து பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்கிறீர்கள் அல்லது பதிவிறக்க இணைப்புகளை பெறுகிறீர்கள் என்றால் அவைகளை தவிர்க்க வேண்டும்.

ஓவர் சார்ஜிங்

ஓவர் சார்ஜிங்

உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜே செய்யும் பழக்கம் கொண்டவர் என்றால் அதன் வாழ்நாள் மெல்ல மெல்ல குறைவது உறுதி. 100% தொசார்ஜ் ஆன பின்னர் உங்கள் தொலைபேசி சார்ஜ் ஆவதில் எந்த பயனும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மிதமிஞ்சிய சூரிய ஒளி வெளிப்பாடு

மிதமிஞ்சிய சூரிய ஒளி வெளிப்பாடு

அதிக அளவிலான சார்ஜ் மாட்டும் தான் உங்கள் கருவியை ஓவர் ஹீட்டிங் ஆக்கும் என்று நினைக்க வேண்டாம் அதிக வெளியில் அல்லது நேரடி சூரிய ஒளியும் சாதன சேதம் ஏற்படுத்தும் என்பதை உணருங்கள். ஆகவே அதீத சூரிய சூடு அல்லது சூரிய வெப்பத்தில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை மறைக்க அல்லது பாதுகாக்க மறவாதீர்கள்.

குறைந்த அளவிலான ஸ்பேஸ்

குறைந்த அளவிலான ஸ்பேஸ்

அடிப்படையில் தொலைபேசியின் சேமிப்பு திறன், சாதனம் வெடிக்க ஒரு முக்கிய காரணமாகும். உடன் குறைவான ஸ்பேஸ் ஆனது உங்கள் தொலைபேசியின் செயல்திறனை இடையூறு செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் தொலைபேசி பயன்பாடுகள் மற்றும் தரவு மூலம் நிரம்பி வழிகிறது என்றால் அது உங்கள் கருவியை மெதுவாக இயக்கும். தேவையில்லாத பயன்பாடுகள், ப்ரவுஸர் தரவு மற்றும் பயன்படுத்தப்படாத மீடியாக்களை நீக்குதல் உங்கள் கருவியின் ஆயுளை நீட்டிக்க உதவும்.

கீழே போடுவது

கீழே போடுவது

இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த விடயத்தில் யார் மீதும் பழி போடா இயலாது ஏனெனில் யாருமே வேண்டுமென்றே பொறுமையோடு தங்கள் கருவிகளை தவற விடுவதில்லை. இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி கருவிகளுக்கு ஸ்க்ரீன் கார்ட் மற்றும் போன் கேஸ்கள் பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

தமிழ் மொழியில் இலவச எஸ்எம்எஸ்/வாட்ஸ்ஆப் மூலம் சைபர் பாதுகாப்பு டிப்ஸ்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
5 Ways You are Accidentally Damaging Your Smartphone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot