இந்த 5 விஷயங்களையும் தெரிஞ்சுக்காம JioBook லேப்டாப்-ஐ வாங்கிடாதீங்க!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் லேப்டாப் ஆன ஜியோபுக் (JioBook), தற்போது திறந்த விற்பனைக்கு வந்துள்ளது.

அதாவது தற்போது இந்த லேப்டாப் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் வாங்க கிடைக்கிறது.

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

ஜியோ நிறுவனத்தின் இந்த பட்ஜெட் லேப்டாப்பை நம்பி வாங்கலாமா.. அல்லது வேண்டாமா? என்கிற யோசனையில் இருக்கும் அனைவருமே ஜியோபுக்கை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் உள்ளன!

அதென்ன விஷயங்கள்? ஜியோபுக் லேப்டாப்பின் "சரியான" விலை நிர்ணயம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!தீபாவளி முதல் Jio 5G! ஆனால் தானாக கிடைக்காது! MyJio App-ல் இதை செஞ்சா மட்டுமே கிடைக்கும்!

முதலில் ரூ.19,500 க்கு வாங்க கிடைத்தது!

முதலில் ரூ.19,500 க்கு வாங்க கிடைத்தது!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப்பை, இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.

அந்த நேரத்தில், ஜியோபுக் லேப்டாப் ஆனது அரசு இணையதளம் வழியாக அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே வாங்க கிடைத்தது. அப்போது ஜியோபுக் லேப்டாப்பின் விலை ரூ.19,500 ஆகும்!

பொது மக்களுக்கான விலை நிர்ணயம் என்ன?

பொது மக்களுக்கான விலை நிர்ணயம் என்ன?

தற்போது இந்தியா முழுவதுமான திறந்த விற்பனைக்கு வந்துள்ள ஜியோபுக் லேப்டாப் ஆனது ரூ.15,799 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் பேஸிக் லேப்டாப்பை (Basic Laptop) தேடும் பட்ஜெட்வாசிகளை குறிவைத்து வெளியாகியுள்ள ஜியோபுக் லேப்டாப் ஆனது, உங்களின் ஆர்வத்தையும் தூண்டுகிறது என்றால்.. அதை வாங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் இதோ:

தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!தீபாவளி ஆபர்-னா இப்படி இருக்கணும்! கொடுத்த பணத்தை அப்படியே திருப்பி தரும் Jio!

01. ஜியோபுக் லேப்டாப்பை எங்கே வாங்குவது?

01. ஜியோபுக் லேப்டாப்பை எங்கே வாங்குவது?

ஜியோபுக் லேப்டாப் ஆனது www.reliancedigital.in வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த லேப்டாப் ரூ.15,799 என்கிற ஆரம்ப விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது!

மேலும், குறிப்பிட்ட சில பேங்க் கார்டுகளின் வழியாக ஜியோ லேப்டாப்பை வாங்கினால் ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

02. ஜியோபுக் லேப்டாப் என்னென்ன கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்?

02. ஜியோபுக் லேப்டாப் என்னென்ன கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்?

ஜியோபுக் லேப்டாப் அந்த ஒரே ஒரு வண்ண விருப்பத்தின் கீழ் மட்டுமே வெளியாகி உள்ளது. அது ப்ளூ கலர் ஆகும்.

ஆக ஜியோபுக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு கலர் ஆப்ஷன் மட்டுமே இருக்கும். வருங்காலத்தில், வேறு சில கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படுமா என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை!

ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!ரூ.10,000 பட்ஜெட்டில் புது Phone தேடும் எல்லோருடைய கண்களும் இது மேல தான் இருக்கு!

03. ஜியோபுக் லேப்டாப்பின் ஸ்க்ரீன் சைஸ் என்ன?

03. ஜியோபுக் லேப்டாப்பின் ஸ்க்ரீன் சைஸ் என்ன?

ஜியோ புக் லேப்டாப்பின் ஸ்க்ரீன் சைஸ் - 11.6 இன்ச் ஆகும். இது எச்டி ரெசல்யூஷனை வழங்கும் ஒரு LCD டிஸ்ப்ளே ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

04. ஜியோபுக் லேப்டாப்பின் பேட்டரி கேப்பாசிட்டி என்ன?

04. ஜியோபுக் லேப்டாப்பின் பேட்டரி கேப்பாசிட்டி என்ன?

ஜியோபுக் லேப்டாப் ஆனது 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும்!

உங்க போன் Settings-ல் இந்த உங்க போன் Settings-ல் இந்த "சீக்ரெட்" மோட் இருக்கானு செக் பண்ணுங்க.. இருந்தா அதிர்ஷ்டம்!

05. ஜியோபுக் லேப்டாப்பில் எவ்வளவு ரேம் உள்ளது?

05. ஜியோபுக் லேப்டாப்பில் எவ்வளவு ரேம் உள்ளது?

ஜியோபுக் லேப்டாப் ஆனது 2ஜிபி அளவிலான ரேம்-ஐ பேக் செய்கிறது.

கூடுதலாக, இது 32 ஜிபி அளவிலான ஈஎம்எம்சி ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது, அதை 128 ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்!

Photo Courtesy: Reliance Digital

Best Mobiles in India

English summary
5 things everyone should know about JioBook laptop before buying it

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X