Subscribe to Gizbot

எலிக்கு பயந்தால் ஒரு நியாயம் இருக்கு, இதுக்கு பயந்தா எப்பிடி.?

Written By:

நம்மில் பெரும்பாலானோர்கள் போபியா (Phobia) என்றால் என்ன.? - என்பதை அறிந்திருப்போம், முக்கியமாக அனுபவித்தும் இருப்போம். போபியா என்பது ஒரு அச்சக்கோளாறு ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு சிலர் எலியை கண்டால் பயந்து ஓடுவார்கள், சிலர் சிலந்தியை பார்த்தல் அலறுவார்கள் மற்றும் சிலர் உயரத்தில் இருந்தால் மிகுந்த அச்சத்தினை உணர்வார்கள். இப்படியாக இந்த போபியா ஆனது தெனாலி திரைப்படத்தில் கமல்ஹாசன் சொல்வது போல - "எல்லாமே பயமயம்" - எல்லாவற்றிலும் பயம் என்பது நிறைந்து உள்ளது என்பது தான் நிதர்சனம். அப்படியாக நீங்கள் நினைத்துக்கூட பார்த்திராத சில போபியாக்கள் உள்ளன. அவைகளையெல்லாம் அறிந்தால் சிரிப்பதா.? வருத்தப்படுவதா.? என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டெக்னோபோபியா (Technophobia)

டெக்னோபோபியா (Technophobia)

அதாவது - தொழில்நுட்பம் மீதான அச்சம். டெக்போபியாக்கள் என்ற அடிப்பைடையில் பார்க்கும் போது டெக்னோபோபியா தான் எல்லாவற்றிற்கும் கொள்ளுத்தாத்தா போன்றதாகும்.

அசாதாரண பயம்

அசாதாரண பயம்

இந்த பரந்த சொற்றொடர் ஆனது தொழில்துறை புரட்சியின் போது அங்கீகாரம் பெற்று அதன் அதீத வளர்ச்சியின் விளைவாக உண்டான ஒன்றாகும் . இதற்கு சரியான விளக்கம் தர வேண்டுமென்றால் "தொழில்நுட்பத்தின் விளைவுகள் மீதான ஒரு அசாதாரண பயம் அல்லது கவலை": என்று கூறலாம். இதுபோன்ற முன்னேறிய தொழில்நுட்பத்தை சுற்றி ஆர்வமில்லாமல் உணரும் மக்கள் அல்லது குழுக்கலை டெக்னோபோப்ஸ் (technophobes) என்று அழைக்கப்படுகிறீர்கள்.

நோமோபோபியா (Nomophobia)

நோமோபோபியா (Nomophobia)

அதாவது உங்களிடம் ஒரு மொபைல் சாதனம் இல்லை என்ற பயம். நீங்கள் ஒரு செல்போன் அடிமை என்றால், இந்த தாழ்வு மனப்பான்மையாய் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். நோமோபோபியா என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்களாக நோமோ என்பது (nomo) நோ மொபைல் என்பதின் சுருக்கமாகும்.

கவலை உணர்வு

கவலை உணர்வு

இவ்வகை பயமானது உங்களிடம் உங்கள் மொபைல் இல்லாத நேரத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மையை, பீதியை அல்லது கவலை உணர்வுகளை உருவாக்கும். இந்த போபியாவிற்குள் பேட்டரி காலி ஆவது, மொபைலை தொலைப்பது ஆகிய உணர்வுகளும் அடக்கம்.

சைபர்போபியா (Cyberphobia)

சைபர்போபியா (Cyberphobia)

அதாவது கணினிகள் மீதான பயம். நம்பினால் நம்புங்கள், சிலர் கணினிகளில் வேலை செய்ய சொன்னால் வெறுப்பான உணர்வை எதிர்கொள்வார்கள் அல்லது அச்சம் கொள்வார்கள். கம்ப்யூட்டர் தொடர்பான எந்த விதமான ஒரு அச்ச உணர்வுமே சைபர்போபியா அறிகுறிகளாகும்.

சமூக எதிர்ப்பு

சமூக எதிர்ப்பு

பல போபியாக்களை போலவே, சைபர்போபியாவும் வெவ்வேறு வடிவங்களில் வரக்கூடும். முக்கியமாக கணினிகளை ஒரு சமூக எதிர்ப்பு தொழில்நுட்பமாக (anti-technology social movements) பார்க்கும் மக்களுக்கு எளிதில் இது ஏற்படலாம்.

டெலிபோனோபோபியா (Telephonophobia)

டெலிபோனோபோபியா (Telephonophobia)

அதாவது தொலைபேசிகள் மீதான பயம். இது தொலைபேசி மீதான பயம் அல்ல. அழைப்புகளை எடுப்பது மற்றும் எடுத்து பதிலளிப்பது சார்ந்த பயமாகும். இது பொது இடத்தில் பேச அச்சம் கொள்ளும் போபியாவான க்ளோஸோபோபியா (glossophia) போன்றே ஒரு அச்சமாகும்.

அச்சத்தாக்குதல்

அச்சத்தாக்குதல்

இந்த அச்சத்தின் கீழ் சிலர் தொலைபேசி ரிங் அடித்த உடனேயே பயந்து நடுங்க ஆரம்பிப்பர் மற்றும் நொடிபொழுதில் அச்சத்தாக்குதல்களுக்கு உள்ளாவர். இதையொரு சமூக கவலை சீர்குலைவு (social anxiety disorder) என்றும் கூறலாம்.

செல்பீபோபியா (Selfiephobia)

செல்பீபோபியா (Selfiephobia)

அதாவது தன்னைத்தானே ஒரு புகைப்படம் எடுக்க பயம் கொள்வது. செல்பீக்கள் புகழ்பெற்ற அதே காலகட்டத்தில் உருவானது தான் இந்த அச்சமும். அது தொழில்முறையாக சரிபார்க்கப்படவில்லை என்றாலும் கூட இணையம் வழியாக பரவலாக பேசப்படும் ஒரு அச்சமாக திகழ்கிறது.

போட்டோஜெனிக் முகமல்ல

போட்டோஜெனிக் முகமல்ல

மக்கள் ஏன் செல்பீபோபிக் ஆக உள்ளனர் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சிலர் நம் முகம் போட்டோஜெனிக் முகமல்ல என்று நினைப்பார்கள், மற்றவர்கள் இது பிறரின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் ஒரு செயல் என்று நினைக்கிறார்கள். சரி நீங்கள் எப்படி.? ஒரு நாளைக்கு 100 செல்பீ எடுப்பவரா.?? அல்லது செல்பீக்களை வெறுப்பவரா.? உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

நீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
5 Tech Phobias You Never Knew Existed. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot