இதற்கு தான் உடனே ஸ்மார்ட் பல்பு வாங்க வேண்டும்.!
ஸ்மார்ட் பல்புகள் எப்போதும் கரண்ட் மிச்சம் செய்யும் எல்இடி-க்கள் ஆகாது. ஸ்மார்ட் பல்புகள் வழக்கமான பல்புகளை போன்று அறையை மட்டும் வெளிச்சப்படுத்தாது.
ஸ்மார்ட் பல்புகள் எப்போதும் கரண்ட் மிச்சம் செய்யும் எல்இடி-க்கள் ஆகாது. ஸ்மார்ட் பல்புகள் வழக்கமான பல்புகளை போன்று அறையை மட்டும் வெளிச்சப்படுத்தாது. இது வழக்கமான பல்புகள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. ஸ்மார்ட் பல்புகள் இன்னும் பலவற்றை செய்ய முடியும். இவை செய்யும்.

ஸ்மார்ட் பல்புகள் ஸ்மார்ட் பெயரை பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை மொபைல் போன் செயலிகளுடன் வயர்லெஸ் முறையில் இணைந்து பல்வேறு அதிசயங்களை செய்யும் திறன் கொண்டுள்ளன. அந்த வகையில் ஸ்மார்ட் பல்புகள் செய்யக்கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.
இவை டிம் செய்யும்:
வீட்டில் டிம்மர் ஸ்விட்ச்களை இன்ஸ்டால் செய்யாமல் சூழலுக்கு ஏற்ப வெளிச்சத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளன. ஸ்மார்ட் பல்புகளுக்கென வழங்கப்பட்டிருக்கும் செயலியை கொண்டு பல்புகளின் வெளிச்சத்தை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யும். இதற்கு தகுந்த ஸ்மார்ட் பல்புகளை வாங்கினாலே வேலை முடிந்தது.

எங்கிருந்தும் இயக்கலாம்:
ஸ்மார்ட் பல்புகளான பெல்கின் வீமோ எல்இடி மற்றும் ஜிஇ லின்க் பல்புகள் நீங்கள் வீட்டில் இல்லையென்றாலும் பல்புகளை இயக்கும் வசதியை வழங்குகின்றன. நீங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இவை சிறப்பான பாதுகாப்பாக அமையும். தெரியாத்தனமாக வீட்டில் மின்விளக்கை அணைக்காமல் சென்று விட்டால் வெளியே இருந்தாலும் ஸ்மார்ட் பல்புகளை இயக்கி அவற்றை ஆஃப் செய்ய முடியும்.
நிறம் மாறும்:
சசூழலுக்கு ஏற்ப பல்புகளை பிரகாசமாகவோ அல்லது வெளிச்சத்தை குறைக்கவோ செய்ய முடியும் என்பதோடு மேலும் பல அம்சங்களை ஸ்மார்ட் பல்புகள் கொண்டுள்ளன. அந்த வகையில் பல்வேறு ஸ்மார்ட் பல்புகள் நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளன. ஃப்ளக்ஸ் ஸ்மார்ட் எல்இடி லைட் பல்பு போன்ற சில மாடல்கள் சுமார் 16 லட்சம் நிறங்களை வழங்குகிறது. இதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை பல்புக்கான செயலியில் உள்ள கலர் வீல் கொண்டு தேர்வு செய்யலாம்.

நிறம் மாறும் பல்பு எதற்கு?
-அறையின் சூழலை குளுமையாக்க வேண்டுமா? பல்பு நிறத்தை லைட் புளுவிற்கு மாற்றுங்கள்
-அறையின் சூழலை வெதுவெதுப்பாக்க பல்பு நிறத்தை கோல்டன் எல்லோவிற்கு மாற்றலாம்
-விசேஷ காலங்களில் வீட்டில் உள்ள மின்விளக்குகளுக்கு ஏற்ப நிறத்தை மாற்றியமைக்கலாம்
-விடுமுறை நாட்களில் கறித்துமஸ்-க்கு ஸ்மார்ட் பல்புகளை சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும், மற்ற பண்டிகைகளுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யலாம்.
-வீட்டின் சுவர் நிறத்தை மாற்ற வேண்டுமா, சற்றே ஸ்மார்ட் பல்பு நிறத்தை மாற்றுங்கள் வேலை முடிந்தது. அடிக்கடி பெயன்ட் அடிக்காமல், ஸ்மார்ட் பல்பு மூலம் வீட்டின் நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம்.
இசையும் வரும்:
எல்லா அறைகளிலும் ஸ்பீக்கர் வயர் வராது என்பதால், ஸ்மார்ட் பல்பு மூலம் வீட்டின் அனைத்து அறைகளிலும் இசையை அனுபவிக்க முடியும். பில்ட் இன் ஸ்பீக்கர்களை கொண்டு எந்நேரமும் இசையை அனுபவிக்கலாம்.

சிறப்பாக உறங்கலாம்:
சிறப்பான உறக்கம் பெற ஸ்மார்ட் பல்புகள் வழி செய்யும். இவற்றில் உள்ள சி ஸ்லீப்கள் அறையின் வெப்பநிலையைக்கு ஏற்ப நிறத்தை மாற்றியமைக்கும். இவ்வகை மின்விளக்குகள் உங்களின் மெலடோனின் அளவுகளை மாற்றியமைத்து உறங்கும் நேரத்தில் மெலடோனின் அளவை அதிகரிக்கும். இதேபோன்று லைட்டிங் சயின்ஸ் எனும் மற்றொரு பல்பு உறங்கும் போது இடையூறு ஏற்படுத்தாத அளவு மென்மையான வெளிச்சத்தை பாய்ச்சும்.


Click it and Unblock the Notifications