Home
Gadgets

Nothing Headphone 1-ஐ நம்பி வாங்க 5 நல்ல காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 3 நியாயமான காரணங்கள்!

அதிகப்படியான விளையால் விமர்சகர்கள் மற்றும் காத்திருந்த கஸ்டமர்கள் மத்தியில் "செம்ம அடி" வாங்கி கொண்டிருக்கும் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஒருபக்கம் இருக்க, அதனுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) ஆனது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

ஜூலை 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நத்திங் ஹெட்போன் 1 மாடலை நம்பி வாங்கலாமா இல்லை வேண்டாமா என்கிற குழப்பம் அல்லது சந்தேகம் உங்களுக்கு இருந்தால்.. இது தொடர்பாக உங்களுக்கு தெளிவு தேவைப்பட்டால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

Nothing Headphone 1-ஐ நம்பி வாங்க 5 நல்ல காரணங்கள்!

வளவளவென்று பேசாமல் நத்திங் ஹெட்போன் 1 மாடலை ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 நல்ல காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான 3 நியாயமான காரணங்களையும் பற்றி பார்த்துவிடலாம். பின்னர் இதன் அம்சங்கள், இந்திய விலை நிர்ணயம் குறித்து பார்க்கலாம்:

நத்திங் ஹெட்போன் 1-ஐ ஏன் நம்பி வாங்கலாம் என்பதற்கான 5 நல்ல காரணங்கள்:
1. இதன் டாக்டைல் (தொட்டுணரக்கூடிய) கண்ட்ரோல்கள்
2. இதன் அட்ஜெஸ்ட்மென்ட் ஆனது மிகவும் ஸ்மூத் ஆக உள்ளது மற்றும் வசதியான ஹெட் பேண்ட்-ஐ கொண்டுள்ளது
3. ஆப் வழியாக ட்வீக் செய்வதற்கான அட்வான்ஸ்டு ஈக்யூ-வை கொண்டுள்ளது
4. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மிகவும் நன்றாக செயல்படுகிறது
5. மற்ற பிளாக்ஷிப் ஹெட்போன்களை விட சற்றே மலிவானதாக இருக்கிறது

நத்திங் ஹெட்போன் 1-ஐ ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான நியாயமான 3 காரணங்கள்:
1. இதன் வடிவமைப்பு அனைவருக்கும் பிடிக்கும்படியாக இல்லை; ஏற்கனவே ஏற்கனவே நத்திங் பிராண்டுகளின் தயரிப்புகளை பழகியவர்களுக்கே இது டக்கென்று பிடிக்கும்.
2. இது உண்மையான குறைபாடு அல்ல, ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும் இது சற்றே ஹெவியாக (எடை அதிகமானதாக) உள்ளது
3. பாஸ்-ல் கொஞ்சம் கவனம் செலுத்தவில்லை; சவுண்ட் ஆனது கம்ப்ரெஸ்டு செய்யப்பட்டது போல உணர முடிகிறது

நத்திங் ஹெட்போன் 1 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- ஓவர் தி இயர், ட்ரான்ஸ்பரென்ட் டிசைன்
- நடுவில் சற்று உயர்த்தப்பட்ட ஓவல் மாட்யூல்
- 40 மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- 42dB ANC வரையிலான ஆதரவு
- டிரான்ஸ்பரன்சி மோட்
- KEF ஆடியோ பொறியாளர்களால் ட்யூன் செய்யப்பட்டுள்ளது
- 4 மைக்ரோஃபோன் உடனான ENC மோட்

Nothing Headphone 1-ஐ நம்பி வாங்க 5 நல்ல காரணங்கள்!

- ப்ளூடூத் 5.3 மற்றும் AAC, SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக் ஆதரவு
- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி ஆதரவு
- Android 5.1 மற்றும் iOS 13 அல்லது அதற்கு மேலான ஓஎஸ்-களுடன் இணக்கம்
- டச் கண்ட்ரோல்களுக்கு பதிலாக ஹெட்போன்களில் தொட்டுணரக்கூடிய பட்டன்கள்
- ஒலியளவை சரிசெய்ய, மீடியாவை மாற்ற மற்றும் ANC முறைகளுக்கு இடையில் மாற ரோலர், பேடில் மற்றும் ஒரு பட்டன்

- 1,040mAh பேட்டரி
- - USB டைப்-சி போர்ட்
- 120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- ANC இல்லாமல் ஐந்து நிமிட பாஸ்ட் சர்ஜிங்கில் 5 மணிநேரம் வரை பிளேபேக்

- ANC இல்லாமல் AAC ஆடியோவை இயக்கும்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இல்லாமல் மற்றும் LDAC ஆடியோவை இயக்கும்போது 54 மணிநேர பேட்டரி லைஃப்
- ANC இயக்கப்பட்டிருந்தால் AAC ஆடியோவை கேட்கும்போது 35 மணிநேர பேட்டரி லைஃப்
- LDAC கோடெக்கை பயன்படுத்தும் போது 30 மணிநேர பேட்டரி லைஃப்
- அளவீட்டில் 1 173.8x78x189.2 மிமீ
- எடையில் 329 கிராம்
- நத்திங் ஹெட்போன் 1 ஆனது ஒரு சாஃப்ட்ஷெல் ஸ்டோரேஜ் கேஸுடன் வருகின்றன.

இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 விலை, விற்பனை சலுகைகள் மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை ரூ.21,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இது வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், பிளிப்கார்ட் மினிட்ஸ், விஜய் சேல்ஸ், மின்த்ரா, குரோமா மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் வழியாக பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வாங்க கிடைக்கும்.

அறிமுக சலுகையை பொறுத்தவரை, ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் முதல் நாள் விற்பனையின் போது நத்திங் ஹெட்போன் 1 மாடல் ரூ. 19,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விற்பனையும் தொடங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Reasons to Buy Nothing Headphone 1 and 4 Reasons Why You Skip Buying in First Sale on July 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X