Home
Gadgets

இத தானே தேடிட்டு இருக்கோம்.. ரூ.8000 பட்ஜெட்டில்.. சின்ன சின்ன ரூம்களுக்கு ஏற்ற 5 Smart TV மாடல்கள்!

உங்கள் வீட்டில் உள்ள ஹால் அல்லது பெட்ரூம் ஆனது சற்றே சிறியதாக இருப்பதால்.. அதற்கு பொருத்தமாக இருக்கும்படியான ஸ்மார்ட் டிவியை வாங்குவதில் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருக்கிறதா? ஆம் என்றால், கவலையை விடுங்கள். நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்ர்கள்:

ஒரு சில நிகழ்ச்சிகளை பார்க்க உதவிய தொலைக்காட்சி பெட்டிகளானது தற்போது நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான ஒரு ஊடகமாக மட்டும் இல்லாமல், பல்வேறு கன்டென்ட்களுக்கான அணுகல் புள்ளியாக.. ஸ்மார்ட் டிவியாக உருமாறி நிற்கிறது. முன்னதாக ஒரு டிவியை வாங்குவதற்கு, அதை வைக்கும் அறையின் அளவு ஒரு பொருட்டே இல்லாமல் இருந்தது.

ரூ.8000 பட்ஜெட்டில்.. சின்ன சின்ன ரூம்களுக்கு ஏற்ற 5 Smart TV மாடல்கள்

ஆனால் தற்போது ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு முன்னதாகவே.. அதை வைப்பதற்கு ஏற்ற அறை உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் - ஸ்மார்ட் டிவியின் ஸ்க்ரீன் சைஸ் தான். சிறிய அறை அல்லது ஹால் அல்லது பெட்ரூமை கொண்டுள்ள வீடுகளில் பெரிய அளவிலான ஸ்க்ரீன் சைஸ் (அதாவது 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச்) கொண்ட டிவிகளை வாங்குவது (உங்கள்கண்களுக்கு) ரிஸ்க் தான்!

ஆக உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் 32-இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகள் தான். அதிலும் குறிப்பாக உங்களுடைய பட்ஜெட் ரூ.10,000 தான் என்றால்.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஸ்மார்ட் டிவிகள் மட்டுமே இந்திய சந்தையில் உள்ளன. அவைகளில் 5 முக்கியமான மாடல்களின் பெயர், விலை மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த பட்டியல் இதோ:

1. 32-இன்ச் விடபுள்யூ லினக்ஸ் சீரிஸ் ஃப்ரேம்லெஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (VW Linux Series Frameless HD Ready Smart LED TV): அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.8,000 ஆகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது பிரேம்லெஸ் டிசைன், எச்டி ரெடி டிஸ்பிளே, மென்மையான நேவிகேஷனுக்கான லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரபலமான ஆப்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகல்கள், எச்டிஎம்ஐ, யூஎஸ்பி மற்றும் பிற போர்ட்கள், பில்ட்-இன் வைஃபை போன்றவைகளை கொண்டுள்ளது.

2. 32-இன்ச் கோடக் ஸ்பெஷல் எடிஷன் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Kodak Special Edition Series HD Ready Smart LED TV): கோடாக் டிவி இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.8,500 ஆகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது எச்டி ரெடி டிஸ்பிளே, பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்கள் மற்றும் ஆன்லைன் கன்டென்ட்டிற்கான அணுகல், பில்ட் இன் வைஃபை, எச்டிஎம்ஐ, யூஎஸ்பி மற்றும் பிற பல போர்ட்கள், தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்கும் 30W சவுண்ட் அவுட்புட் போன்றவைகளை கொண்டுள்ளது.

3. 32-இன்ச் வெஸ்டிங்ஹவுஸ் W2 சீரிஸ் எச்டி ரெடி சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (Westinghouse W2 Series HD Ready Certified Android LED TV): அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.9,000 ஆகும்.

4. 32-இன்ச் எக்ஸ்எலெக்ட்ரான் பிரேம்லெஸ் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கிளவுட் எல்இடி டிவி (XElectron Frameless Series HD Ready Smart Cloud LED TV): எக்ஸ்எலெக்ட்ரான் வலைத்தளம் மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.8,700 ஆகும்.

5. 32-இன்ச் டயனோரா சிக்மா எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Dyanora Sigma HD Ready Smart LED TV): டயனோரா வலைத்தளம் மற்றும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.8,499 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Best Small Size 32 inch Smart TV Models Which Suitable For your Small Rooms Under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X