பட்ஜெட் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்குற ஐடியா இருக்கா? இதோ டாப் 5 லிஸ்ட்.!

|

இந்திய சந்தையில் தற்போது ஒன்பிளஸ், சியோமி, நோக்கியா போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம்

குறிப்பாக இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது இந்நிறுவனம் பட்ஜெட்விலையில் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

 1. ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி

1. ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி

32-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1366×768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன்வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த ஒன்பிளஸ் டிவி டால்பி ஆடியோ தொழில்நுட்பத்துடன் கூடிய 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்
டிவி ஆப் ஸ்டோரில் இருந்து Netflix, YouTube மற்றும் பல பயன்பாடுகளைப் பதிவிறக்க உங்களை அனுமதிக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 5ஜி சேவை: நல்ல செய்தி சொன்ன Airtel.! 5G இம்மாதமே ரெடியா?ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 5ஜி சேவை: நல்ல செய்தி சொன்ன Airtel.! 5G இம்மாதமே ரெடியா?

ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ரேம்

ஒன்பிளஸ் 32Y1 ஸ்மார்ட் டிவி ரேம்

1ஜிபி ரேம், 64-பிட் பவர்ஃபுல் பிராஸசர், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.

2.சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

2.சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

32-இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரு.15,499-விலையில் வாங்க முடியும். இந்த சியோமி ஸ்மார்ட் டிவி1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், vivid picture engine மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது.

 சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ பிராசஸர்

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ பிராசஸர்

அதேபோல் கார்டெக்ஸ் ஏ35 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ மாடல்.
மேலும் 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் போன்ற சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி.

3.Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

3.Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி (32UA) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். இந்தVu ஸ்மார்ட் டிவி 1,366 x 768 பிக்சல்ஸ், பெசல்-லெஸ் டிசைன், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், குவாட்-கோர் பிராசஸர் (64 பிட்) ஆதரவு, 1ஜிபி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ் போன்ற தரமானஅம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி  ஆடியோ

Vu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆடியோ

மேலும் இந்த Vu பிரீமியம் டிவி 32-இன்ச் டிவி மாடல் ஆனது DTS TruSurround மற்றும் Dolby Audio ஆகியவற்றிற்கான ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெட்பிளிக்ஸ், யூடியூப், யூடியூப் மியூசிக், ஈரோஸ் நவ், YuppTV, பிரைம் வீடியோ மற்றும் பலவற்றிற்கான ஆதரவுடன் Linux ஸ்மார்ட் ஓஎஸ்ஸில் இயங்குகிறது இந்த ஸ்மார்ட் டிவி.யுஎஸ்பி போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், ஏவி போர்ட், டிஜிட்டல் ஆடியோ, ஏஆர்சி மற்றும் ஆப்டிகல்போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தVu பிரீமியம் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.

4.சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி

4.சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி

32-இன்ச் கொண்ட சாம்சங் Wondertainment ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL) மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். இந்த சாம்சங் டிவி 1366×768 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 20 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவு,அமேசான் அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் பிக்ஸ்பி குரல் ஆதரவு போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி.

 5.நோக்கியா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

5.நோக்கியா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி

நோக்கியா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32HDADNVVEE)மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். இந்தநோக்கியா ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சலஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது.

அதேபோல் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி. எனவே சிறந்த ஆடியோ
அனுபவம் கிடைக்கும். பின்பு ஆணட்ராய்டு 11 இயங்குதளம், டூயல் பேண்ட் வைஃபை, குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ்
போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
5 Best 32-inch Smart TVs in August 2022: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X