வீட்டுக்கு 1 ஆர்டர்.. பெசல் லெஸ் டிசைன்.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் VU 55 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
வியூ (VU) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் வியூ நிறுவனத்தின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவிக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த 55-இன்ச் டிவியை ரூ.26499 விலையில் வாங்கிவிட முடியும்.

வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (Vu 43 inch 4K Smart Google TV Specifications): இந்த வியூ 55 இன்ச் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், 60
ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மோட், சினிமா மோட் (Cinema Mode) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் வெப் ஓஎஸ் (WebOS) மூலம் இந்த ஸ்மார்ட் டிவி இயங்குகிறது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு கொண்ட ரிமோட் உடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் ஐபிஎஸ் பேனல் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த வியூ ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது வியூ நிறுவனம்.
குவாட் கோர் பிக்சர் இன்ஜின் உடன் இந்த அட்டகாசமான வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி வெளிவந்தது. அதேபோல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி வெளிவந்துள்ளது. அதுவும் ஏஎல்எல்எம் (ALLM) வசதியும் இந்த டிவியில் உள்ளது.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 50W பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த பல்வேறு ஆடியோ மோட் இந்த டிவியில் உள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் மற்ற டிவிகளை விட தனித்துவமான ஆடியோவை வழங்கும் இந்த வியூ டிவி.
ப்ளூடூத் (Bluetooth), டூயல் பேண்ட் வைஃபை (dual-band WiFi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட் மற்றும் ஆடியோ ஜாக் (Audio Jack) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த வியூ சினிமா 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








