அசரவைக்கும் அமேசான்..டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி ( (43 inch Xiaomi A Pro 4K TV S) மாடலுக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.20749 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே டிவி அம்சங்கள் (43 inch Xiaomi A Pro 4K TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் இந்த 43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.
இதுதவிர எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ஃப்ளோவ் எம்ஈஎம்சி (Reality Flow MEMC) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டிவி. மேலும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான ஏஎல்எல்எம் (ALLM) உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் இடம்பெற்றுள்ளன.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. எனவே இதில் பல புதிய அம்சங்கள் கிடைக்கும். அதேபோல் இதில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட்டெட் ஆப்ஸ் பயன்படுத்தலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளன. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இதில் உள்ளது. இதுதவிர ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring)ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி.

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ஈஆர்சி (eARC) , ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் (Bazel-less Design) மற்றும் மெட்டல் ஃபிரேம் (Metal Frame) கொண்டிருக்கிறது 43 இன்ச் சியோமி ஏ ப்ரோ 4கே ஸ்மார்ட் டிவி. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி தற்போது தள்ளுபடி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








