Home
Gadgets

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 50 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் தாம்சன் 50 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Thomson 50 inch QLED Ultra HD 4K Smart Google TV) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 40W ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், 1.08 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது.

Q50H1000 எனும் மாடல் நம்பர் கொண்ட தாம்சன் 50 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

வெளுத்துக் கட்டும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் 50 இன்ச் 4K டிவி..

தாம்சன் 50 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Thomson 50 inch QLED 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான தாம்சன் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10 +), எச்எல்ஜி (HLG), 550 நிட்ஸ் பிரைட்னஸ், 1.08 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

மீடியாடெக் எம்டி9602 பிராசஸர் உடன் இந்த 50 இன்ச் டிவி வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி-ஜி52 ஜிபியு (mali g52 gpu) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. அதேபோல் இந்த இந்த டிவியில் 16ஜிபி மெமரி மற்றும் 2ஜிபி ரேம் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த தாம்சன் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்(Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ் ஆதரவு கொண்ட 40W ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் 50 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி வெளிவந்தது. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்போர்ட் மோட் (Sports Mode), கேம் மோட் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) ஆதரவுடன் தாம்சன் 50 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது.

யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
48 percent discount on Thomson 50 inch QLED 4K Smart Google TV in Flipkart sale: Check Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X