Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Redmi 4கே டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி 43 இன்ச் கொண்ட ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Redmi Smart Fire TV 4K) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), டால்பி ஆடியோ, 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ரெட்மி டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்

பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கொண்ட ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 எடிஷன் (REDMI 4K Smart FireTv 2024 Edition) மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரெட்மி 4கே டிவியை ரூ.20749 விலையில் வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் Redmi 4கே டிவி.. எந்த மாடல்?

43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள்: 4கே டிஸ்பிளே (4K display) உடன் 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி டிவி.

குறிப்பாக விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) போன்ற பல அம்சங்கள் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடலில் உள்ளன.

மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் (Metal Bezel-less Design) உடன் 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். அதேபோல் ஆக்டோ-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-core Cortex A55 processor) உடன் வெளிவந்துள்ளது இந்த டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல் இயங்கும். அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களைஇந்த டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த ரெட்மி டிவியின் ரிமோட். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல். எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. ஆஃபரில் Redmi 4கே டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் கொண்ட ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 எடிஷன். மேலும் இதில் 24W ஸ்பீக்கர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

Best Mobiles in India

English summary
48 Percent Discount on Redmi 43 inch 4K Smart Fire TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X