Home
Gadgets

கூவி கூவி விற்கும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது Big Saving days எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை இருக்கும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி (Redmi) டிவிக்கும் இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு (Redmi 43 inch 4K Smart Fire Tv) 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20749 விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி..

ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi 43 inch 4K Smart Fire Tv Specifications) : இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது 4K டிஸ்பிளே, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் HDR 10, விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் டிவியில் உள்ளன.

ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் தரமான குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் இயங்குகிறது. அதேபோல் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என ரெட்மி நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதன்படி வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

கூவி கூவி விற்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி..

குறிப்பாக வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு bகனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி டிவி. மேலும் 24W ஸ்பீக்கர்கள் வசதியும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
48 percent discount on Redmi 43 inch 4K Smart Fire Tv in Flipkart sale: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X