Home
Gadgets

போனா வராத ஆஃபர்.. 8ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. கம்மி விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது சியோமி 32-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி அமேசான் தளத்தில் சியோமியின் 32-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MI A Series HD Ready Smart Google TV) மாடலுக்கு அமேசான் தளத்தில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.12,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது எனவே இந்த டிவியை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும்.

போனா வராத ஆஃபர்.. 8ஜிபி மெமரி.. கம்மி விலையில் சியோமி டிவி..

32-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (MI A Series HD Ready Smart Google TV specifications): எச்டி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக மெட்டல் பெசல்-லெஸ் (Bezel-less) வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி .

இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். அதேபோல் சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் சியோமி டிவி.

இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் ஏ35 சிப் (Quad Core A35) வசதி உள்ளது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த 32-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் ஆனது கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி. அதேபோல் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி.

போனா வராத ஆஃபர்.. 8ஜிபி மெமரி.. கம்மி விலையில் சியோமி டிவி..

பேட்ச்வால் + (PatchWall +) ஆதரவைக் கொண்டுள்ளது 32-இன்ச் எம்ஐ ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
48 percent discount on MI A Series HD Ready Smart Google TV model on Amazon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X