Home
Gadgets

ஆளுக்கொரு 43 இன்ச் டிவி.. வெறும் ரூ.13499 பட்ஜெட்ல 40W ஆடியோ.. ஆண்ட்ராய்டு.. HDR.. 8ஜிபி மெமரி!

இந்தியாவில் ப்ளூபங்க்ட் (Blaupunkt) ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் டிவிகளை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் 43 ப்ளூபங்க்ட் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.13499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கொரு 43 இன்ச் டிவி.. வெறும் ரூ.13499 பட்ஜெட்ல 40W ஆடியோ..

43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி அம்சங்கள் (43 inch Blaupunkt CyberSound TV Specifications): புல் எச்டி எல்இடி டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. 1920 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே.

இதுதவிர 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle),450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. குறிப்பாக 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட் கோர் மீடியாடெக் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 (Quad-core MediaTek ARM Cortex A53) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் வருகிறது. எனவே இந்த டிவியை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி . குறிப்பாக பல்வேறு புதிய அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ப்ளூபங்க்ட் நிறுவனம்.

மேலும் இந்த டிவி கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதுதவிர யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவியில் பயன்படுத்தலாம்.

ஆளுக்கொரு 43 இன்ச் டிவி.. வெறும் ரூ.13499 பட்ஜெட்ல 40W ஆடியோ..

இந்த டிவியில் குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) போன்றவற்றையும் பயன்படுத்தலாம். 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவியின் போர்ட்களை பொறுத்தவரை, 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port) மற்றும் ஆடியோ ஜாக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ப்ளூடூத் (Bluetooth ) மற்றும் வை-பை கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டுள்ளது.'

40W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), மூவிஸ் (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports) உள்ளிட்ட ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் இந்த டிவியுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
48 Percent Discount on 43 inch Blaupunkt CyberSound TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X