Home
Gadgets

இப்படி ஒரு Earbuds க்கு பல பேர் வெயிட்டிங்! வெறும் ரூ.1300க்கு 48 மணிநேர பிளேபேக்; IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ்!

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸை (Wireless Earbuds) வாங்கும் போது, அதில் சில சமரசங்களை செய்ய வேண்டியது இருக்கும். ஆனால் ஒரு சில தயாரிப்புகள் அதற்கு விதிவிலக்காக இருக்கும். அப்படியான ஒரு தயாரிப்பு தான் இந்திய நிறுவனமான ட்ரூக் அறிமுகம் செய்துள்ள ட்ரூக் பட்ஸ் ஏ1 (Truke Buds A1) இயர்பட்ஸ்!

கடந்த மாதம் ட்ரூக் பிடிஜி பீட்டா (Truke BTG Beta) என்கிற இயர்பட்ஸை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, ட்ரூக் அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இதோ:

வெறும் ரூ.1300 க்கு 48 மணிநேர பிளேபேக்கை வழங்கும் இயர்பட்ஸ் அறிமுகம்!

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

ரூ.1200 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ட்ரூக் பட்ஸ் ஏ1 இயர்பட்ஸ் ஆனது ஹைப்ரிட்-ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) உடனாக 30dB வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் தெளிவான அழைப்பிற்காக குவாட்-மைக் இஎன்சி (Quad-MIC ENC) உடன் வருகிறது.

சினிமா போன்ற இசை அனுபவம்

மேலும் இது 3 ஈக்யூ மோட்ஸ்: டைனமிக் ஆடியோ (3 EQ modes: Dynamic Audio) உடனான 10 மிமீ ரியல் டைட்டானியம் ஸ்பீக்கர் டிரைவர்களையும் (Real Titanium Speaker Drivers) கொண்டுள்ளது. ட்ரூக் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது உயர் தர சினிமா போன்ற இசை அனுபவத்தையும் வழங்கும்.

வேகமான கனெக்டிவிட்டி, நல்ல ஸ்டெபிலிட்டி

மேலும் இந்த இயர்பட்ஸில் பாஸ் பூஸ்ட் மோட் (Bass Boost Mode) மற்றும் மூவி மோட் (Movie Mode) போன்ற பயன்முறைகளும் உள்ளன. இந்த இயர்பட்ஸில் உள்ள ஒன் ஸ்டெப் இன்ஸ்டன்ட் பாரிங் (One Step Instant Paring) தொழில்நுட்பமானது, லேட்டஸ்ட் ப்ளூடூத் 5.3 உடன் வேகமான இணைப்பு மற்றும் அதிக நிலைத்தன்மையை வழங்குகிறது.

சிங்கிள் சார்ஜில் 48 மணிநேர பிளேபேக்

ட்ரூக் பட்ஸ் ஏ1 இயர்பட்ஸ் மொத்தம் 48 மணிநேரம் என்கிற பிளேபேக் டைமை (Playback Time) வழங்குகின்றன மற்றும் இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் (மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆஃப் செய்து வைத்தால்) உங்களுக்கு 10 மணிநேர பிளே டைம் கிடைக்கும்

ஃபாஸ்ட் சார்ஜருடன் சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு

இந்த இயர்பட்ஸ் சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்ட 300mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் இதனுடன் யூ-எஸ்பிஐ ஃபாஸ்ட் சார்ஜரும் வருகிறது. இது 50ms வரையிலான அல்ட்ரா லோ லேடன்சியை ஆதரிக்கிறது. இது முழுக்க-முழுக்க கேமர்களை கவர்ந்திழுக்கும் ஒரு நல்ல அம்சமாகும்.

1 வருட வாரண்டி

ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் உடன் வரும் இந்த இயர்பட்ஸ்க்கு 1 வருட உத்தரவாதமும் கிடைக்கிறது. ட்ரூக் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் 250 க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளதால், இந்த இயர்பட்ஸ் உடன் வரும் 1 வருட வாரண்டியானது ஒரு நல்ல கூடுதல் சலுகையாகவே தெரிகிறது.

விலை மற்றும் விற்பனை

ப்ளூ மற்றும் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள ட்ரூக் பட்ஸ் ஏ1 இயர்பட் அசல் விலை ரூ.1499. இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் இது ரூ.200 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.1299 க்கு வாங்க கிடைக்கும். இது அமேசான் வழியாக ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கிறது மற்றும் இதன் விற்பனை வருகிற மார்ச் 3 முதல் தொடங்கும்.

Best Mobiles in India

English summary
48 Hrs Playback Time For Just Rs 1299 Truke Buds A1 Earbuds Amazon Sale From March 3 Check Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X