Home
Gadgets

செப்டம்பர் ஆரம்பமே ஆஃபர்.. 40W ஸ்பீக்கர்கள்.. 8GB ஸ்டோரேஜ்.. குறைந்த விலையில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் தாம்சன் (Thomson) நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி ஆனது 40W ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளம், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய தாம்சன் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் 9ஆர் ப்ரோ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி (Thomson 9R PRO 43 inch Ultra HD 4K LED Smart TV) மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த டிவியை ரூ.16499 இருந்தால் வாங்கிவிட முடியும்.

செப்டம்பர் ஆரம்பமே ஆஃபர்.. குறைந்த விலையில் 4K ஸ்மார்ட் டிவி..

தாம்சன் 9ஆர் ப்ரோ 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Thomson 9R PRO 43 inch Smart TV Specifications): இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் டிவி.

அதாவது விவிட் கலர்ஸ் (vivid colors), ஹை-பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட், 178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.

அதன்படி குவாட் கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 (ARM Cortex A53) பிராசஸர் உடன் இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த பிராசஸர். மேலும் இந்த டிவியில் மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்தடிவியை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டு இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்தலாம். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் தாம்சன் 9ஆர் ப்ரோ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

40W ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் (Box Speaker) இந்த டிவியில் உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுதவிர ஆறு சவுண்ட் மோட் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.

செப்டம்பர் ஆரம்பமே ஆஃபர்.. குறைந்த விலையில் 4K ஸ்மார்ட் டிவி..

அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது தாம்சன் 9ஆர் ப்ரோ ஸ்மார்ட் டிவி. பின்பு பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல்வேறு ஓடிடி ஆப்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஹெட்போன் ஜாக், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல்.

photo credit: mythomson.com

More from GizBot

Best Mobiles in India

English summary
47 Percent Discount on Thomson 9R PRO 43 inch Smart TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X