வாய்ப்பில்ல ராஜா.. இதை விட கம்மி விலையில் 4K டிவி கிடைக்காது.. 40W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி 4கே டிஸ்பிளே, 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 8ஜிபி மெமரி மற்றும் பல்வேற சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவி தற்போது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( Thomson 9R PRO 43 inch 4K Smart TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. மேலும் விவிட் கலர்ஸ் மற்றும் சிறந்த கான்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது தாம்சன் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்-கோர் பிராசஸர் உடன் இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஏஆர்ம் கார்டெக்ஸ் ஜிபியு A53 (ARM Cortex A53) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. இதுதவிர கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி 450 ஜிபியு (Mali-450 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
எனவே இந்த தாம்சன் ஸ்மார்ட் டிவியை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் டிவி. எனேவ இந்த டிவியில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
குரோம்காஸ் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே போன்ற சிறப்பான அம்சங்கள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் இந்த தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஏர்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் டிவி. மேலும் பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற முக்கியமான ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் 40 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் தாம்சன் 9ஆர் ப்ரோ 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இதுதவிர வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட் கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








