விட்றாதீங்க.. 30W ஸ்பீக்கர்கள்.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்43) மாடலுக்கு அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலுக்கு 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ1500 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே ரூ.21499 இருந்தால் போதும் இந்த அசத்தலான ன் ரெட்மி 43-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்43) மாடலை வாங்க முடியும். மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 அம்சங்கள் (Redmi 4K Ultra HD Smart TV X43 specifications): சமீபத்திய பேட்ச்வால் 4 UI வசதியுடன் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 3840 × 2160 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் என்பதால் நம்பி வாங்கலாம்.
ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியில் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ், டால்பி அட்மோஸ், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எச்டி உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (Youtube) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சப்போர்ட் 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவும் கொண்டுள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் மிக அருமையாகப் பயன்படும். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 4கே ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications