Home
Gadgets

ஆர்டர் அதிருது.. ரூ.9,499 போதும்.. LED டிஸ்பிளே.. DOLBY ஆடியோ.. 30W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி.. எந்த டிவி?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 32 இன்ச் எல்இடி டிஸ்பிளே, டால்பி ஆடியோ, 30W ஸ்பீக்கர்கள், 8 ஜிபி மெமரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட கோடக் 32 இன்ச் 9எக்ஸ்பிஆர்ஓ சீரிஸ் டிவியானது, அசத்தல் தள்ளுபடியில் கிடைக்கிறது.

கோடக் 32 இன்ச் டிவி அம்சங்கள் (Kodak 32 inches TV Specification): இதுவொரு 9எக்ஸ்பிஆர்ஓ சீரிஸ் (9XPRO Series) மாடலாகும். இந்த டிவியில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது.

ரூ.9499 போதும்.. LED டிஸ்பிளே.. 30W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி டிவி!

அதுமட்டுமல்லாமல், எச்டி ரெடி ரெசொலூஷன் (HD Ready Resolution), எச்டிஆர் (HDR), சூப்பர் கான்ட்ராஸ்ட் (Super Contrast) மற்றும் ஹை-பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த கோடக் டிவியின் ஆடியோ அம்சங்களை பார்க்கையில், 2 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவொரு பாக்ஸ் டைப் மாடலாகும்.

இந்த ஸ்பீக்கர்கள் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 30W ஆடியோ அவுட்புட் வருகிறது. இதில் ஸ்டான்டர்ட் (Standard), சினிமா (Cinema), மியூசிக் (Music), நியூஸ் (News) மற்றும் பர்சோனல் (Personal) ஆகிய சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. மேலும், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் ( DTS TruSurround) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த கோடக் டிவி ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) கொண்டுள்ளது. அதோடு 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) பயன்படுத்தலாம். ஆகவே, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5, ஆக்ஸிஜன் பிளே, ஈராஸ் நவ், ஜியோசினிமா, சோனிலிவ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற ஓடிடி ஆப்கள் சப்போர்ட் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குரோம்காஸ்ட் (Chromecast) மற்றும் ஏர்பிளே (AirPlay) ஆப்களையும் பயன்படுத்த முடியும். அதேபோல கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) வருகிறது. லேப்டாப் (Laptop), மொபைல் (Mobile) மற்றும் பிசி (PC) ஆகியவற்றில் கனெக்ட் செய்துகொள்ள முடியும். அதோடு டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

ரூ.9499 போதும்.. LED டிஸ்பிளே.. 30W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி டிவி!

இந்த கோடக் டிவியில் மூன்று எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் வருகிறது. அதோடு செட்-டாப் பாக்ஸ் கனெக்டிவிட்டி போர்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் வருகிறது. இந்த டிவியில் ரியல்டெக் (Realtek) சிப்செட் மற்றும் மாலி (Mali) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இதுவொரு பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) டிவியாகும். பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டிவிக்கு எல்இடி பேக்லிட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரிமோட்டில் இன்டர்நெட் அக்சஸ் சப்போர்ட் உள்ளது. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. அதோடு 6 மாதத்துக்கான அசசரிஸ் வாரண்டி கொடுக்கப்படுகிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த டிவியின் விலை அமேசான் (Amazon) தளத்தில் ரூ.17,999ஆக நிர்யணம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு, 45% டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.9,499க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.10,000 பட்ஜெட்டில் பக்காவான அம்சங்களை கொண்ட டிவி வேண்டும் என்றால், இந்த டிவி நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
47 Percent Discount on Kodak 32 inches 9XPRO Series HD LED TV in Amazon Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X