Home
Gadgets

யாரு விடுவா? 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தற்போது அமேசான் தளத்தில் அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

அமேசான் தளத்தில் ரெட்மி (Redmi) 43-இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (L43M6-RA/L43M7-RA) மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.18,999 விலையில் வாங்க முடியும்.

ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த டிவியின அம்சங்களைப் பார்ப்போம். இந்த ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 178 Degree wide viewing angle, 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதன் மென்பொருள் வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு இந்த ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture என்ஜின்) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

ரெட்மி ஸ்மார்ட் டிவிக்கு அதிரடி விலைகுறைப்பு.. எந்த மாடல்?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூட்யூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. அதாவது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஷார்ட்கட் கீ இந்த டிவி ரிமோட்டில் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை, யுஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். ஒன்பிளஸ், எல்ஜி, சாம்சங் நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ரெட்மி நிறுவனம் தனது 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை சற்று குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

அதேபோல் சமீபத்தில் தான் ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி 43-இன்ச் 4கே ஃபயர் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து ரூ.24,999 விலையில் விற்பனைக் கொண்டுவந்தது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம் கொண்ட இந்த 43-இன்ச் ரெட்மி டிவிக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 percent off on 43-inch Redmi Smart TV at Amazon: check all details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X