Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 40W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

தாம்சன் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தாம்சன் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் OATHPRO Max 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.21,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.

வீட்டுக்கு 1  வாங்குவீங்க.. 8GB மெமரி.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

எனவே இந்த தாம்சன் 4கே ஸ்மார்ட் டிவியை ரூ.20,499 இருந்தால் வாங்கிவிட முடியும். மேலும் இப்போது தாம்சன் OATHPRO Max 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Thomson OATHPRO Max Ultra HD (4K) LED Smart Android TV) அம்சங்களைப் பார்ப்போம்.

தாம்சன் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல்ஸ் வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்நஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

அதேபோல் பெசல்-லெஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமன தாம்சன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த தாம்சன் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. மேலும் இதில் மாலி-450ஜிபியு (Mali-450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாம்சன் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன்ச் உள்ளிட்ட பல சேவைகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பிளே ஸ்டோரில் முக்கியமான ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான தாம்சன் 43-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

வீட்டுக்கு 1  வாங்குவீங்க.. 8GB மெமரி.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

இந்த டிவி உடன் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் வருகிறது. பின்பு இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன. இதுதவிர டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், ஈதர்நெட், ஏர்பிளே, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த 4கே டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அடுத்த ஆண்டு தாம்சன் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
46 percent discount on Thomson OATHPRO Max 4K TV on Flipkart: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X