மிரளுது ஆர்டர்.. வெறும் ரூ.24999 போதும்.. 50 இன்ச் டிவி.. 4K ரெசொலூஷன்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
கூகுள் டிவி ஓஎஸ், 4K ரெசொலூஷன், டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 2 ஜிபி ரேம், 16ஜிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் ஃபிரேம்லெஸ் டிசைனில் வெளியான 50 இன்ச் ஏசர் எல்இடி டிவிக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஏசர் 50 இன்ச் எல்இடி டிவி அம்சங்கள் (Acer 50 inch LED TV Specifications): இந்த டிவி அட்வான்ஸ் ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலாகும். இந்த டிவியில் 50 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) அல்ட்ரா எச்டி (Ultra HD) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன் வருகிறது.

மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் வருகிறது. டால்பி விஷன் (Dolby Vision), வைடு கலர் காமட் (Wide Colour Gamut), எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. இதுபோக, அல்ட்ரா எச்டி அப்ஸ்கேலிங் (UHD Upscaling), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆகவே, கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். அதேபோல ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) வருவதால், கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் வீடியோக்களை பார்க்கலாம். வீடியோவை போலவே ஆடியோ பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இந்த ஏசர் டிவியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே, 36W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொண்டிருக்கிறது. வீடியோவில் டால்பி விஷன் வருவதால், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஸ்டேடியம் (Stadium), ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music) போன்ற மோட்களுடன் ஹை பைடெலிட்டி ஸ்பீக்கர்கள் (High Fidelity Speakers) வருகின்றன.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) ஓஎஸ் வருகிறது. 64 பிட் குவாட் கோர் சிப்செட் கொண்டிருக்கிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொண்டிருக்கிறது. வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் உள்ளது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கொண்டிருக்கிறது. இந்த 50 இன்ச் ஏசர் எல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்ப்போம்.
இந்த ஏசர் டிவியில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wifi), டூ வே ப்ளூடூத் (2 Way Bluetooth), 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), கேமிங் கன்சோல் (Gaming Console), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), ஆடியோ போர்ட் (Audio Port) மற்றும் வழக்கமான செட்-டாப் பாக்ஸ் (Set-top Box) கனெக்டிவிட்டிகள் வருகின்றன.
இந்த பீச்சர்களுடன் ஃபிரேம்லெஸ் டிசைன் (Frameless Design) கொண்டிருப்பதால், பிரீமியம் லுக் மற்றும் அவுட்புட் கொண்டிருக்கிறது. இந்த டிவியின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இருப்பினும், அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த உடனடி டிஸ்கவுண்ட்டை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, 4K ரெசொலூஷன், கூகுள் டிவி ஓஎஸ், டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்ட இந்த 50 இன்ச் ஏசர் எல்இடி டிவியை வெறும் ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








