ஆளுக்கு 1 ஆர்டர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் (Xiaomi X Series Smart TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி எச்டிஆர் 10, டால்பி ஆடியோ, 30W ஸ்பீகர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது சியோமி எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.21,999 விலையில் வாங்கிவிட முடியும்.

43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் அம்சங்கள் ( 43 inch Xiaomi Smart TV X Series specifications): சியோமி-இன் 43-இன்ச் ஆனது 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர்10 உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி.
94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி.
தரமான குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் 43 இன்ச் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 4கே டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் டிவி இயங்குகிறது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி. மேலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட அம்சங்களுடன் இந்த அட்டகாசமான டிவி வெளிவந்துள்ளது.
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல். மேலும் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த சியோமி டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








