இதை விட்ராதீங்க சார்.. 10200mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. IPS டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
பிரீமியம் டேப்லெட்களில் கிடைக்கும் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்காவான நேரம் வந்துவிட்டது. பெரிய டிஸ்பிளே, பிரீமியம் ஆடியோ குவாலிட்டி மற்றும் அதிக பேக்கப் கொண்ட பேட்டரி செட்டப் கொடுக்கும் மோட்டோ பேட் 70 ப்ரோ (Moto Pad 70 Pro) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலுக்கு 45 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.40,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,525 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.38,474 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இப்போது பீச்சர்களை பார்க்கலாம்.

மோட்டோ பேட் 70 ப்ரோ அம்சங்கள் (Moto Pad 70 Pro Specifications): 13 இன்ச் (3504 x 2190 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் ஐபிஎஸ் எல்சிடி (LTPS IPS LCD) டிஸ்பிளேவை இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஏஐ பவர்டு மோட்டோ பென் ப்ரோ (Moto Pen Pro) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஸ்டைலஸ் வழியாக ஸ்மார்ட் கேப்ச்சர் (Smart Capture), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image) பீச்சர்களை அணுகலாம்.
ஏஐ பவர்டு ரைட்டிங் உள்ளிட்டவை கிடைக்கின்றன. மேலும், ஏஐ சூப்பர் ரெஸ் (AI Super Res), ஏஐ லைவ் டிரான்ஸ்கிரிப்ட் (AI Live Transcript) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. செல்பீ, வீடியோ கால்களுக்காக 8 எம்பி ப்ரன்ட் கேமரா உள்ளது.
இதில் பிக்சடு போகஸ் கிடைக்கிறது. பவர் கீ (Power Key) இருக்கிறது. இதை ஃபிங்கர்பிரிண்ட் சென்சாராக (Fingerprint Sensor) பயன்படுத்தி கொள்ளலாம். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. இது ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் பிராண்ட்டாக இருப்பதால், ஆடியோ குவாலிட்டி பிரீமியமாக இருக்கும்.
IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் வி6.0 (Bluetooth v6.0) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications