Home
Gadgets

கேமிங் உலகமே மிரளுது.. 120 இன்ச்.. 4K அல்ட்ரா எச்டி.. 3D கீஸ்டோன்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி பிளே ஸ்டேஷன் கன்சோல் கனெக்டிவிட்டி மட்டுமல்லாமல், 120 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்கிரீன், டால்பி அட்மோஸ் ஆடியோ, எச்டிஆர்10, 3D வீடியோ சப்போர்ட் போன்ற பீச்சர்களுடன் பென்கியூ எக்ஸ்300ஜி புரொஜெக்டர் வெளியாகி இருக்கிறது.

பென்கியூ எக்ஸ்300ஜி அம்சங்கள் (BenQ X300G Specifications): இந்த பென்கியூ மாடலின் டிஸ்பிளேவை பொறுத்தவரை, 4K அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு
120 இன்ச் புரொஜெக்சன், 2000 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens), 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் மற்றும் எல்இடி (LED) சப்போர்ட் வருகிறது.

கேமிங் உலகமே மிரளுது.. 120 இன்ச்.. 4K அல்ட்ரா எச்டி.. 3D கீஸ்டோன்!

விஜிஏவில் (VGA) 640 x 480 பிக்சல்கள் மற்றும் 4K அல்ட்ரா எச்டியில் (4K UHD) 3840 x 2160 பிக்சல்கள் ரொலூஷன் சப்போர்ட் கொண்டுள்ளது. டிஎல்பி புரொஜெக்சன் சிஸ்டம் (DLP Projection System) கொண்டிருக்கிறது. 1.2x ஜூமிங் ரேசியோ மற்றும் 0.69-0.83 த்ரோவ் ரேசியோ வருகிறது. 3D கீஸ்டோன் அட்ஜெட்ஸ்மெண்ட் (3D Keystone Adjustment) வருகிறது.

இந்த பென்கியூ எக்ஸ்300ஜி மாடலில் 3டி (3D), பிரைட் (Bright), சினிமா (Cinema), எப்பிஎஸ் (FPS), எச்டிஆர் எப்பிஎஸ் (HDR FPS), எச்டிஆர் ஆர்பிஜி (HDR RPG), எச்டிஆர் எஸ்பிஜி (HDR SPG), எச்டிஆர்10 (HDR10), ஆர்பிஜி (RPG), எஸ்பிஜி (SPG) போன்ற பிக்சர் மோட்கள் (Picture Modes) வருகின்றன.

2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் வருகிறது. இதில் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) மற்றும் யுஎஸ்பி டைப்-ஏ (USB Type-A) சப்போர்ட் கொண்டிருக்கிறது. பில்ட்-இன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Built-in Android 11 OS) வருகிறது. இந்த மாடலின் ஆடியோவை பொறுத்தவரையில், 8W அவுட்புட் வருகிறது.

கேமிங் உலகமே மிரளுது.. 120 இன்ச்.. 4K அல்ட்ரா எச்டி.. 3D கீஸ்டோன்!

அதுமட்டுமல்லாமல், எச்டிஎம்ஐ ஆடியோ ரிடர்ன் (HDMI Audio Return), ஈஏஆர்சி (eARC) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி வருகிறது. ஏர்பிளே (AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast) போன்ற வயர்லெஸ் புரொஜெக்சன் (Wireless Projection) வருகிறது.

இந்த பென்கியூ எக்ஸ்300ஜி வேரியண்ட்டில் விஎல்சி (VLC), வயர்லெஸ் புரொஜெக்சன், பென்கியூ நோட்டிபிகேஷன் ஆப் (BenQ Notification App) போன்ற இன்-பில்ட் ஆப்கள் வருகின்றன. மொத்தமாக 3 கிலோ எடை கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி (Android TV) கனெக்டிவிட்டியும் கொண்டிருக்கிறது.

பிளே ஸ்டேஷன் போன்றவற்றில் கனெக்ட் செய்து நேரடியாக 4K வீடியோ அவுட்புட்டில் கேமிங் விளையாட முடியும். டால்பி ஆடியோ, 3டி கீஸ்டோன் போன்ற அம்சங்கள் வருவதால், தியேட்டர் எஸ்பிரீயன்ஸ் மட்டுமல்லாமல், கேமிங் அனுபவமே அடுத்த லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த பென்கியூ எக்ஸ்300ஜி வேரியண்ட்டின் விலை ரூ. 1,52,490ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையும் அறிமுக சலுகை மட்டுமே விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. பிரீமியம் தியேட்டர் செட்டப் புரொஜெக்டர் வேண்டுமானல், இதை தேர்ந்தெடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
45 Percent Discount on BenQ X300G Gaming Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X