வாங்கலாமே 2 டிவி.. ரூ.11000 பட்ஜெட்ல Google டிவி.. ஃபிரேம்-லெஸ் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்ல 32 இன்ச் டிவி வாங்கனும், அதுவும் நல்ல டிஸ்கவுண்ட்டில வாங்கனும்னு வெயிட் பண்ண கஸ்டமர்களுக்கு இப்போது நேரம் வந்துவிட்டது. அமேசான் மெகா டிவி டேஸ் விற்பனையில் (Amazon Mega TV Days Sale) 45 சதவீதம் வரையில் உடனடி டிஸ்கவுண்ட் உடன் 32 இன்ச் டிவிகள் விற்பனையாகின்றன. இந்த பட்டியலில் டிசிஎல் (TCL) மற்றும் ஏசர் (Acer) நிறுவனங்களின் 32 இன்ச் எல்இடி டிவிகளுக்கு (LED TVs) கொடுக்கப்படும் டிஸ்கவுண்ட் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
32 இன்ச் டிசிஎல் டிவி அம்சங்கள் (32 inch TCL TV Specifications): இதுவொரு எல்4பி சீரிஸ் (L4B Series) மாடலாகும். இந்த டிவி மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metallic Bezel-Less) டிசைனில் 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10) சப்போர்ட் வருகிறது.

மேலும், ஏஐபிகியூ என்ஜின் (AiPQ Engine) மற்றும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) வருகிறது. மல்டி-வியூவிங் மோட் கொண்டிருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 16W சவுண்ட் அவுட்புட் வருகிறது. இந்த 32 இன்ச் டிசிஎல் டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. குவாட்-கோர் சிப்செட் உள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. ஆகவே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in), நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்கள் வருகின்றன. ஏஐ-கிளாரிட்டி (Ai-Clarity), டி-ஸ்கிரீன் (T-Screen) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இன்-பில்ட் வை-பை (In-Built Wi-Fi) வருகிறது.
ப்ளூடூத், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, ஹெட்போன் ஜாக் மற்றும் கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டிவியின் விலை ரூ.11,490ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் மெகா டிவி டேஸ் விற்பனையில் ரூ.1,149 டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். ரூ.10,341 பட்ஜெட்டில் வாங்கலாம்.

32 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (32 inch Acer TV Specifications): இந்த டிவி அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலாகும். முந்தைய மாடலை போலவே 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10, 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் மைக்ரோ டிம்மிங் வருகிறது.
மேலும், இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிளைசேஷன் என்ஜென் (Intelligent Frame Stabilization Engin), ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction), சூப்பர் பிரைட்னஸ் (Super Brightness) போன்ற பீச்சர்களை கொண்டிருக்கிறது. 30W ஆடியோ அவுட்புட் வருகிறது. டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. 5 சவுண்ட் மோட்கள் இருக்கின்றன.
குவாட் கோர் சிப்செட் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் கொண்டிருக்கிறது. 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் ஆப் சப்போர்ட் உள்ளது. டூயல் பேண்ட் வை-பை, டூ வே ப்ளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜாக், கேமிங் கன்சோல் கனெக்டிவிட்டி வருகிறது.
இந்த 32 இன்ச் ஏசர் டிவியின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் மெகா டிவி டேஸ் விற்பனையில் ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் பெற எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். ஆகவே, இந்த ஏசர் டிவியை ரூ.11,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








