அதிர போகுது அமேசான்.. 16GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4K டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரெட்மி நிறுவனத்தின் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கும் தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எக்ஸ்43 (Redmi 4K Ultra HD Android Smart LED TV X43) மாடலுக்கு அமேசான் தளத்தில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.

குறிப்பாக 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 அம்சங்கள் (Redmi 4K Ultra HD Smart TV X43 specifications): 3840 × 2160 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது சமீபத்திய பேட்ச்வால் 4 UI வசதியுடன் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சக்திவாய்ந்த குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவும் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியில் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ், டால்பி அட்மோஸ், டிடிஎஸ்-எச்டி உள்ளிட்ட ஆடியோ அம்சங்களும் உள்ளன.

43-இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி மாடலில் டிடிவியில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (Youtube) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது. டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








