வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 4K வீடியோ.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
தற்போது அமேசான் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 (Portronics Beem 510) ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4K சப்போர்ட், 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), ஆட்டோ கீஸ்டோன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல் வெளிவந்துள்ளது.
அமேசான் தளத்தில் இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடலை தற்போது ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 510 அம்சங்கள் (Portronics Beem 510 Specifications): போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்டுள்ளது இந்த எல்இடி (LED)ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல். குறிப்பாக 1080p ஃபுல் HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் 4K அல்ட்ரா HD ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 490 மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டரில் 5300 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி உள்ளது. குறிப்பாக இது தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும். அதுவும் கேமிங், திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த புரொஜெக்டர் மிக அருமையாக பயன்படும்.
மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் ஆனது 5W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (5W Stereo Speakers) உடன் வெளிவந்துள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோமேட்டிக் போகஸ், மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் உடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் வெளிவந்தது
அதேபோல் ஸ்மார்ட் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 510 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் முக்கியமான ஸ்ட்ரீமிங் ஆப்களை இந்த புரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும்.
ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இன்புட் மற்றும் அவுட்புட் போர்ட் (Input And Output Ports), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், லேன் (LAN) போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 510 புரொஜெக்டர் மாடலில் உள்ளன.
போர்ட்ரானிக்ஸ் பீம் 510 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலில் புளூடூத் மற்றும் வைஃபை ஆதரவும் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








