Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கலாம் போலயே.. 200 இன்ச்.. LED சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புரொஜெக்டர் மாடல்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது கம்மி பட்ஜெட் அதிநவீன அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் புரொஜெக்டர் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் புரொஜெக்டர் மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புரொஜெக்டர் மாடல் ஒன்றுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.16,899 விலையில் வாங்க முடியும்.

வீட்டுக்கு 1 வாங்கலாம் போலயே.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டரை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடலை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 அம்சங்கள் (Portronics Beem 460 Specifications): இதுவொரு எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலாகும். அதோடு 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு இதில் உள்ளது. எனவே பிக்சர் குவாலிட்டி மிகுந்த தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இது ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். அதற்குத் தகுந்தபடி 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது. அதேபோல் இதில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும்.

இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரை ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும். குறிப்பாக சிறந்த கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடல்.

கேமிங் கன்சோல் (gaming console) ஹார்டு டிரைவ் (Hard Drive) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் வருகிறது. கூடவே ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் (Bluetooth Connectivity) இருக்கிறது.

வீட்டுக்கு 1 வாங்கலாம் போலயே.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்..

இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இது வைஃபை ஆதரவும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புரொஜெக்டர் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. மேலும் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ஆனது அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த ஆண்டு பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
44 Percent Discount on Portronics Beem 460 Smart Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X