மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.21499 பட்ஜெட்ல 4K டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் வீடியோ.. எந்த மாடல்?
அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையில் (Amazon Fab TV Fest Sale) 43 இன்ச் டிவிகளுக்கு 40 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ரூ.22,000 பட்ஜெட்டுக்குள் 4K அல்ட்ரா எச்டி டிவிகள் கிடைக்கின்றன. ரெட்மி, ஹைசென்ஸ் டிவிகளில் கிடைக்கும் ஆஃபர்கள் இதோ.
43 இன்ச் ரெட்மி ஃபயர் டிவி அம்சங்கள் (43 inch Redmi Fire TV Specifications): இதுவொரு ஃபயர் டிவி சீரிஸ் (Fire TV Series) மாடலாகும். இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160) 4K அல்ட்ரா எச்டி எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 (HDR10) வருகிறது.

24W சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் வருகிறது. 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.0, 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. ஓடிடி ஆப்கள் சப்போர்ட் உள்ளது.
மெட்டல் பெசல்-லெஸ் டிசைனில் வருகிறது. 1 வருட வாரண்டி கொண்டிருக்கிறது. இந்த டிவியின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ.2,500 தள்ளுபடியோடு அமேசான் தளத்தில் விற்பனையாகிறது. இந்த தள்ளுபடி எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ரூ.21,499 விலைக்கு இந்த 4K டிவியை வாங்கலாம்.
43 இன்ச் ரெட்மி ஆண்ட்ராய்டு டிவி அம்சங்கள் (43 inch Redmi Android TV Specifications): இதுவொரு 4K ஆண்ட்ராய்டு சீரிஸ் (4K Android Series) மாடலாகும். இந்த டிவியிலும் 43 இன்ச் (3840 x 2160) 4K அல்ட்ரா எச்டி எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்டிருக்கிறது.

30W சவுண்ட் அவுட்புட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் 10 மற்றும் குவாட் கோர் சிப்செட் வருகிறது. 2ஜிபி ரேம் + 16ஜிபி மெமரி வருகிறது. வை-பை, ப்ளூடூத், ஓகே கூகுள் சப்போர்ட் வருகிறது.
3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் கொண்டிருக்கிறது. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இதன் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,500 தள்ளுபடியோடு ரூ.21,499 விலைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது, எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.
43 இன்ச் ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (43 inch Hisense Smart TV Specifications): இதுவொரு ஈ7கே சீரிஸ் (E7K Series) மாடலாகும். இந்த டிவியில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 43 இன்ச் (3840 x 2160) 4K அல்ட்ரா எச்டி கியூஎல்இடி டிஸ்பிளே வருகிறது. டால்பி விஷன், எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

24W அவுட்புட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட்டுடன் வருகின்றன. குவாட் கோர் சிப்செட் கொண்டிருக்கிறது. ஓடிடி ஆப்கள் சப்போர்ட் வருகிறது. டூயல் பேண்ட் வை-பை, ப்ளடூத், 3 எச்டிஎம்ஐ, 2 யுஎஸ்பி போர்ட் வருகிறது. 4 வருட வாரண்டி கொண்டிருக்கிறது. இந்த டிவியின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது.
இருப்பினும், அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனை முன்னிட்டு ரூ.1000 தள்ளுபடியோடு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எச்டிஎப்சி பேங்க் (HDFC BANK) கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த 43 இன்ச் ஹைசென்ஸ் டிவியை வெறும் ரூ.20,999க்கு வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications