அமேசான் அதிர போகுது.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Redmi 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
அமேசான் (Amazon) தளத்தில் 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பெசல் லெஸ் டிசைன், 8ஜிபி ஸ்டோரேஜ், தரமான பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. இப்போது இந்த அசத்தலான ரெட்மி (Redmi) டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 43 இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஃபயர் டிவி (43 inch Redmi 4K Ultra HD Smart Fire TV) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ரெட்மி 4கே டிவியை ரூ.22,249 விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் ( Redmi 4K Ultra HD Smart Fire TV Specifications): 3840 x 2160பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் இதில் 4கே டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதி இருக்கிறது. அதேபோல் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதன்படி குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) உடன் இந்த டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவம் கொடுக்கும்.
ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல். 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக ஃபயர் ஓஎஸ் 7 ஆனது மேம்பட்ட பல புதிய அம்சங்களை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த டிவியுடன் வருகிறது. குறிப்பாக இந்த ரிமோட்டில் அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.

தரமான 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த 43 இன்ச் ரெட்மி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவியின் கனெக்டிவிட்டி பொறுத்தவரை வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா ஆகியவை உள்ளன.மேலும் ரெட்மி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications