இதுக்கு மேல குறைக்க முடியாது.. 8ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ரெட்டி 4K டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் 2024 (Amazon Great Summer Sale 2024) எனும் சிறப்பு விற்பனை இன்று முதல் நடைபெறுகிறது. குறிப்பாக அமேசான் பிரைம் உறுப்பினர்கள் மே 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சாதனங்களைத் தள்ளுபடியில் வாங்க முடியும்.
மற்ற பயனர்கள் மே 2-ம் தேதி மதியம் 2 மணி முதல் சாதனங்களைத் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், டேப்லெட், ஏசி, இயர்போன் என பல்வேறு சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது ரெட்மி நிறுவனத்தின் 4கே ஸ்மார்ட் டிவிக்கும் அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடலுக்கு தான் 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.21,999 இருந்தால் இந்த 4கே டிவியை வாங்கிவிட முடியும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே அம்சங்கள் (Redmi Smart Fire TV 4K 43 specifications): 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவியின் டிஸ்பிளே. மேலும் இந்த ரெட்மி டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) தொழில்நுட்ப வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல். இதுதவிர சிறந்த பாதுகாப்பு வசதியும் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் தனித்துவமான ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. எனவே மேம்பட்ட பல புதிய அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கும்.
சக்திவாய்ந்த குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. மேலும் இதில் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4கே மாடல். எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் நெட்பிளிக்ஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்டுள்ளது 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி. இதுதவிர அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் ஆகியவற்றுக்கான ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட். மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. பின்பு 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
மேலும் வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








