Home
Gadgets

100 இன்ச் TV கதை முடிந்தது.. ரூ.19,999 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன் & போகஸ்.. எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பீம் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 120 இன்ச் ப்ரொஜெக்சன் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Portronics Beem 570 Smart Projector) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ், 4K சப்போர்ட் கொண்ட இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

100 இன்ச் டிவி வாங்கும் விலைக்கு 4 போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம். அமேசான் தளத்தில் 43 சதவீத தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக இந்த ப்ரொஜெக்டரை வாங்கி கொள்ள முடியும்.

100 இன்ச் TV கதை முடிந்தது.. ரூ.19,999 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்!

ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Smart LED Projector) மாடலாக இருப்பதால், ஸ்மார்ட் டிவியை போலவே பயன்படுத்தி கொள்ளலாம். வேல் டிவி ஓஎஸ் (Whale TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மாடலாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix) சர்டிஃபைடு மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுபோக யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கின்றன. 5W ஆடியோ அவுட்புட் கொண்ட இன்-பில்ட் ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டு உள்ளது. டிவியில் கிடைக்கும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் கிடைத்துள்ளது.

போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 570 Smart Projector Specifications): 60 இன்ச் முதல் 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 4 அடி இடைவெளியில் 60 இன்ச் ப்ரொஜெக்சன் மற்றும் 10 அடி இடைவெளியில் 120 இன்ச் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கொண்ட மாடலாக போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது.

இருப்பினும், 4கே சப்போர்ட் (4K Support) கிடைத்துள்ளது. 10,000 லுமென்ஸ் கிடைக்கிறது. 50,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் (Lamp Life) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ மேட்டிக் இமேஜ் சேப் கொடுக்க ஆட்டோபோகஸ் (Autofocus) கிடைக்கிறது. மேலும், ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கொண்ட மாடலாகவும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. ஸ்மார்ட் டிவிகளில் கிடைப்பதை போல டூயல்-பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.

1080p நேட்டிவ் ரெசொலூஷன் கொண்ட ப்ரொடெஜெக்டர்களில் 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுக்கும் மாடலான இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 570 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஃபுல்எச்டி ரெசொலூஷனில் ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங்கிலும் லேக்-ப்ரீ அனுபவம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Portronics Beem 570 Smart Projector Upto 120 Inch Screen in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X