Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. 200 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. ஆஃபரில் Portronics புரொஜெக்டர். எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 (Portronics Beem 300) புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே ரூ.15,999 விலையில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் Portronics புரொஜெக்டர். எந்த மாடல்?

போர்ட்ரானிக்ஸ் பீம் 300 அம்சங்கள் (Portronics Beem 300 Specifications): 1920X1080 பிக்சல்ஸ், ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 30,000 லுமன்ஸ் எல்இடி லேம்ப் அவுட்புட் போன்ற பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 300 புரொஜெக்டர் மாடல்.

இதுதவிர 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support), எல்இடி 250 லுமன்ஸ் ப்ரைட் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக மேம்பட்ட புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

எச்டிஎம்ஐ போர்ட், ஏயூஎக்ஸ்(AUX), யூஎஸ்பி (USB) போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடல். அதேபோல் பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலில் டூயல் பேண்ட் வைஃபை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10W இன்-பில்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்

அதேபோல் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) ஆதரவு இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது. பின்பு லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை இந்த புரொஜெக்டர் உடன் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு 1 வாங்கலாம்.. ஆஃபரில் Portronics புரொஜெக்டர். எந்த மாடல்?

1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 எல்இடி புரொஜெக்டர் மாடல். கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புரொஜெக்டரில் 50 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே இது ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும்.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பல ஸ்ட்ரீமிங் தளங்கள் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 300 மாடலில் உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த சாதனம் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Portronics Beem 300 Projector in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X