அதிரி புதிரி ஆர்டர்.. 24W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ.. ஆஃபரில் OnePlus 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 4கே ஸ்மார்ட் டிவிக்கு அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் 43-இன்ச் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவிக்கு (43Y1S Pro) தள்ளுபடி 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

எனவே 43-இன்ச் ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலை ரூ.21,499 விலையில் வாங்கிவிட முடியும். அமேசானில் இந்த டிவிக்கு அதிரி புதிரி ஆஃபர் கிடைப்பதால் ஆர்டர் தூள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் 4கே ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (OnePlus Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro): டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த டிவி. மேலும் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் டிவி வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்த டிவியின் டிஸ்பிளே 3840x2160 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் 4கே அல்ட்ரா எச்டி ஆதரவு இந்த டிவியில் உள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதன்படி ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் 43-இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 64-பிட் பிராசஸர் இந்த டிவியில் உள்ளது. கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, அமேசான் அலெக்சா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
குறிப்பாக மேம்பட்ட காமா எஞ்சின், எச்டிஆர் 10, எச்எல்ஜி, எச்டிஆர் 10 பிளஸ் போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 1 பில்லியன் கலர்ஸ் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியில் 3 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை,புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜியோ சினிமா, ஈரோஸ் நவ், ஆக்சிஜன் ப்ளே உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்க் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.


Click it and Unblock the Notifications