தீபாவளிக்கு பட்டாசு ஆஃபர்.. ரூ.23,499 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி.. Google TV ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு டிவிகள் விற்பனைக்கு கிடைக்க தொடங்கிவிட்டன. மோட்டோரோலா டிவி மாடல்களுக்கு 50 சதவீதம் வரையில் ஆஃபர் கிடைக்கிறது. இதில் 43 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவி (MOTOROLA EnvisionX 50 inch 4K TV) குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மோட்டோரோலா டிவியானது, 43 சதவீத தள்ளுபடி போக ரூ.26,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.3,500 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஈஎம்ஆ ஆப்ஷன் இல்லையென்றாலும், அதே எச்டிஎப்டி கிரெடிட் கார்டுக்கு ரூ,2,750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (MOTOROLA EnvisionX 50 inch 4K TV Specifications): இந்த மோட்டோரோலா டிவி டிஸ்பிளே, சிப்செட் மற்றும் ஆடியோ போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் மீடியாடெக் குவாட் கோர் (Mediatek Quad -Core) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) வருகிறது.
இதுபோக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மட்டுமல்லாமல், இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. இதில் ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கிறது. அதேபோல கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கிடைக்கிறது. இதுபோக வாய்ஸ் எனபில்ட் ரிமோட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா டிவியில் 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு பட்ஜெட் விலையிலும் எச்டிஆர்10 (HDR1), 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கிடைக்கிறது. அதோடு பெசல்-லெஸ் ஃபிரேம் கிடைப்பதால், பட்ஜெட்டிலும் பிரீமியம் மாடல்களுக்கு நிகரான அவுட்புட் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் 6 டிஸ்பிளே மோட்களையும் இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவி கொடுத்து இருக்கிறது.
ஆகவே, விவிட், ஸ்டான்டர்ட், யூசர், மூவி, ஸ்போர்ட் மற்றும் எனர்ஜி சேவிங் மோட்கள் கிடைக்கின்றன. இதுபோக ஐ கேர் மோட் (Eye Care Mode) கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், ஏஐ எனபில்ட் பர்சனலைஸ்டு கன்டென்ட் (AI Enabled Personailzed Content) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ஆடியோவுக்கும் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவியில் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் உள்ளது.
அதேபோல டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கொண்ட ஆடியோ அவுட் கிடைக்கிறது. 20W சவுண்ட் அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் மோட்களை பார்க்கையில், ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), ஸ்போர்ட் (Sport), மூவி (Movie) போன்றவறை கிடைக்கின்றன. இதுபோக இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவிக்கு டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட் (DTS Trusurround) கிடைக்கிறது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கிடைக்கிறது. பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும். அதேபோல எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டிகள் உள்ளன. இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 50 இன்ச் 4கே டிவியானது 50UHDGDMBSXP மாடலாகும். அதேபோல என்விஷன்எக்ஸ் சீரிஸ் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








