Home
Gadgets

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 30W ஸ்பீக்கர்கள்.. HDR.. ஆஃபரில் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் கோடாக் 42 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டிவி பெசல்-ஃப்ரீ டிசைன், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. இப்போது கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (KODAK 42 inch Full HD LED Smart Android TV) மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட.. ஆஃபரில் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி..

எனவே ரூ.14999 இருந்தால் கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.

கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (KODAK 42 inch Smart Android TV specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1080 x 1920 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் இந்த கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் பெசல்-ஃப்ரீ டிசைன் (bezel-free design) கொண்டுள்ளது இந்த மாடல்.

விவிட் கலர்ஸ் (vivid colors), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) மற்றும் சிறந்த காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். கம்மி விலையில் இதுபோன்ற அம்சங்களை எந்த நிறுவனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்-கோர் ரியல்டெக் (Realtek) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல். அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவியில் மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த கோடாக் டிவியை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த கோடாக் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டிடிஎஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) அம்சத்தைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அம்சம் கிடைக்கும். மேலும் இந்த டிவியில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன. பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த கோடாக் டிவியில் பயன்படுத்த முடியும்.

கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஹெட்போன் ஜாக், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த கோடாக் 42 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
43 Percent Discount on KODAK 42 inch Smart Android TV in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X