Home
Gadgets

வீட்டுக்கு வீடு 43 இன்ச் டிவி.. ரூ.21,000 பட்ஜெட்ல ஒன்பிளஸ் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் மெகா டிவி டேஸ் விற்பனையில் (Amazon Mega TV Days Sale) வெறும் ரூ.25000 பட்ஜெட்டுக்குள் 43 இன்ச் 4K எல்இடி டிவிகளுக்கு நம்ப முடியாத அளவுக்கு 40 சதவீதத்துக்கும் அதிமாக டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த விற்பனையில் 43 இன்ச் ஒன்பிளஸ் 4K டிவியானது, வெறும் ரூ.21,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல ரூ.23,000 பட்ஜெட்டில் 43 இன்ச் ரெட்மி 4K டிவி கிடைக்கிறது. இந்த டிவிகளின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

43 இன்ச் ஒன்பிளஸ் டிவி அம்சங்கள் (43 inch OnePlus TV Specifications): இந்த டிவி ஒய் சீரிஸ் (Y Series) மாடலாகும். 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K டிஸ்பிளே வருகிறது. அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) பிரீமியம் லுக் கொடுக்கிறது.

வீட்டுக்கு வீடு 43 இன்ச் டிவி.. ரூ.21,000 பட்ஜெட்ல ஒன்பிளஸ் 4K டிவி!

எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), 1 பில்லியன் கலர் டெப்த், எம்ஈஎம்சி (MEMC) கொண்ட என்ஜின் (Gamma Engine) சப்போர்ட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் டிவியில் 24W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி அட்மோஸ் டீகோடிங் (Dolby Atmos Decoding) சப்போர்ட் உள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast), மிராகாஸ்ட் (Miracast) மற்றும் டிஎல்என்ஏ (DLNA) கனெக்டிவிட்டிகள் வருகின்றன. மேலும், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.

ஒன்பிளஸ் கனெக்ட் ஈகோசிஸ்டம் (OnePlus Connect Ecosystem) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் மற்றும் டூயல் பேண்ட் வை-பை வருகிறது. அதேபோல 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் கேமிங் கன்சோல் வயர்டு கனெக்டிவிட்டிகள் வருகின்றன. இந்த ஒன்பிளஸ் டிவிக்கு அமேசான் மெகா டிவி டேஸ் விற்பனையில் 43 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, வெறும் ரூ.22,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.21,749 பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 4K டிவியை வாங்கி கொள்ளலாம். இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. பிளாக் கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு 43 இன்ச் டிவி.. ரூ.21,000 பட்ஜெட்ல ஒன்பிளஸ் 4K டிவி!

43 இன்ச் ரெட்மி டிவி அம்சங்கள் (43 inch Redmi TV Specifications): இந்த டிவிக்கும் 43 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) டிஸ்பிளே வருகிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K எச்டிஆர் (HDR), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) மற்றும் P3 கலர் காமட் வருகிறது. இந்த ரெட்மியின் ஆடியோவை பார்க்கையில், 24W சவுண்ட் அவுட்புட் உடன் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) மற்றும் டிடிஎஸ்-எச்டி (DTS-HD) சப்போர்ட் கொண்டுள்ளது.

ஏர்பிளே 1 மற்றும் மிராகாஸ்ட் ஸ்கிரீன் காஸ்டிங் சப்போர்ட் உள்ளது. ஃபயர் டிவி ஓஎஸ் வருகிறது. 2 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி வருகிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்கள் சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் வை-பை, எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஈதர்நெட் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

அமேசான் தள்ளுபடியில் ரூ.24,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,249 பட்ஜெட்டில் இந்த 4K டிவியை வாங்கலாம். அதுவே, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐயில் வாங்கினால், ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
43 Percent Discount on 43 inch OnePlus 4K TV in Amazon Mega TV Days Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X