ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 34 சதவீத ஆபரில் 43 இன்ச் XIAOMI டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் 55 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் 43 இன்ச் டிவிகள் நம்ப முடியாத கம்மி விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன. இப்போது, 34 சதவீத தள்ளுபடியில் 43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் 4கே டிவி வாங்க கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே டிவி (43 inch XIAOMI X Series Ultra HD 4K TV) 34 சதவீத தள்ளுபடியில் ரூ.24,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 விலைக்கு இந்த 43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் டிவியை வாங்கி கொள்ளலாம்.

43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் 4கே டிவி அம்சங்கள் (43 inch XIAOMI X Series 4K TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120 Hz கேம் பூஸ்டர் கிடைக்கிறது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் அல்ட்சா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கிடைக்கிறது.
எச்டிஆர் 10 (HDR 10), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எம்ஈஎம்சி (MEMC) கிடைக்கிறது. ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் ஐ-கேர் மோட் (Eye Care Mode) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுடன் 94 சதவீத டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine) கிடைக்கிறது. மேலும், பிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொண்டுள்ளது.
பெசல்-லெஸ் டிசைனில் மெட்டர் ஃபிரேம் வருகிறது. 30 W சவுண்ட் அவுட்புட் கொண்டுள்ள 2 ஸ்பீக்கர்களை இந்த 43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் 4கே டிவி கொடுத்துள்ளது. இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைத்துள்ளது. மேலும், டிடிஎஸ் எக்ஸ் (DTS X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) கொண்டுள்ளது. சியோமி ஆடியோ (Xiaomi Sound) உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் சியோமி டிவி பிளஸ் (Xiaomi TV+) கிடைத்துள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. மேலும், பர்சோனல் புரொபைல் (Personal Profile), கிட்ஸ் புரொபைல் (Kids Profile), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assitant) மற்றும் ஆம்பியன்ட் மோட் (Ambient Mode) கொண்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற ஓடிடி ஆப்களை இந்த 43 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் 4கே டிவி கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுக்கிறது. மேலும், ஏ5 குவாட் கோர் (A55 Quad Core) ப்ராசஸர் கொடுத்துள்ளது. ஈதர்நெட் கிடைக்கிறது.
மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், 3.5 எம்எம் இயர்போன் ஜாக், ஏவி இன்புட் மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டிகள் உள்ளன. வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதுவொரு L43MB-AIN மாடலாகும். எக்ஸ் சீரிஸ் கீழ் கிடைக்கிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








