ஆர்டர் பிச்சிக்குது.. 24W ஸ்பீக்கர்கள்.. 8GB ஸ்டோரேஜ்.. கம்மி விலையில் சியோமி டிவி.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் சியோமி நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது சியோமி (Xiaomi) 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலுக்கு தற்போது 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவியை ரூ.22,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்போது இந்த சியோமி ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

அதாவது சியோமி எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசத்தலான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad core Cortex A55) உடன் வெளிவந்துள்ளது. எனேவ இந்த ஸ்மார்ட்டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இது சாப்ட்வேரை பொறுத்தவரை, இது Android 11 TV OS அடிப்படையிலான Xiaomi நிறுவனத்தின் சொந்த PatchWall UI உடன் வருகிறது.
மேலும் IMDb இன்டக்ரேஷன், யுனிவர்சல் சேர்ச், 300+ லைவ் சேனல்கள், 'பேரண்ட் லாக்' உடனான கிட்ஸ் மோட் மற்றும் 'யூசர் சென்டர்' போன்ற அம்சங்களை இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி எம்ஐ எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.
இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் விவிட் பிக்சர் என்ஜின் ஆதரவு உள்ளது. அதேபோல் பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த அட்டகாசமான எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

டால்பி ஆடியோ ( Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் (DTS Virtual: X) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது எம்ஐ 43-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.
டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.௦, ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சியோமி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் சியோமி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








