இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 29 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?
32 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 43 இன்ச் டிவி கிடைத்தால் சொல்லவா வேண்டும், விற்பனை பட்டையை கிளப்பாமல் இருக்குமா? அப்படியான தள்ளுபடி விலைக்கு 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (43 inch Xiaomi A Smart Google LED TV) கிடைக்கிறது. இந்த சியோமி டிவியின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 29 சதவீத தள்ளுபடி விலைக்கு 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும்,தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.658 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியுடன் மேலும் மலிலான விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பிரீமியம் பெசல்-லெஸ் டிசைனில் (Premium Bezel Less Design) கொண்ட மாடலாக இந்த 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஃபுல்எச்டி டிஸ்பிளே (FHD Display) கிடைப்பதால், இந்த விலைக்கு ரெசொலூஷனும் பட்டையை கிளப்பும்படி கொடுக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.
43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி அம்சங்கள் (43 inch Xiaomi A Smart Google LED TV Specifications): டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X), டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. 20W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி (Google TV) சப்போர்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களுடன் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொண்ட மாடலாக 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி உள்ளது.
மேலும், பில்ட்-இன் வை-பை (In-Built Wi-Fi) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரிக்கான அவுட்புட்டை இந்த 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுக்கிறது. 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டி ரெசொலூஷன் உள்ளது.
டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் கிடைக்கின்றன. 2 யூஎஸ்பி போர்ட்கள் உள்ளன. மேலும், ப்ளூடூத், ஈதர்நெட் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளையும் இந்த 43 இன்ச் சியோமி ஏ ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
