Home
Gadgets

பெசல்-லெஸ் டிசைன்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் டிவிக்கு விலைகுறைப்பு..மிஸ் பண்ணாதீங்க..

இந்திய சந்தையில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தோஷிபா(TOSHIBA) நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிக்கு விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி (TOSHIBA V Series Full HD Smart TV) மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி முன்பு ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் ரூ.18,999 விலையில் வாங்க முடியும்.

பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் டிவிக்கு விலைகுறைப்பு..மிஸ் பண்ணாதீங்க..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ரெக்ஸா பிக்சர் எஞ்சின் (Regza picture Engine), பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

குறிப்பாக 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் பிராசரஸ் வசதி (Quad core processor) உள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்டுள்ள பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி. மேலும் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவுடன் 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) ஆகிய ஆடியோ அம்சங்களைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான தோஷிபா ஸ்மார்ட் டிவி.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த 43-இன்ச் தோஷிபா வி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
43-inch Toshiba Smart TV is 46 percent off on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X