திரும்ப கிடைக்காத ஆஃபர்.. Vivid டிஸ்பிளே, 8ஜிபி ஸ்டோரேஜ்.. 43-இன்ச் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்..
பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் பிரபலமான தோஷிபா ஸ்மார்ட் டிவி தற்போது கம்மி விலையில் வாங்கக் கிடைக்கிறது.
அதாவது 43-இன்ச் தோஷிபா வி25கேபி (TOSHIBA V35KP) ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனது தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த டிவியை ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ மூலம் வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவியில் விவிட் (Vivid)டிஸ்பிளே, ரெக்ஸா எச்ஜி எஞ்சின் (Regza HG Engine) உள்ளிட்ட பல சிற்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் என்றே கூறலாம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஏ பிளஸ் கிரேடு எல்இடி பேனலை (A+ Grade LED Panel) கொண்டுள்ளது. மேலும் 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் (300 nits Brightness) ஆதரவைக் கொண்டு இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி துல்லியமான வண்ணங்களை வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
சிஏ55 எக்ஸ் 4 (CA55 x 4) பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 (ஆர்) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவைக் கொண்டு இந்த 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி. குறிப்பாக டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X), டால்பி ஆடியோ (Dolby Audio) உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது, மேலும் இந்த டிவியில் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், புளூடூத்,ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. கம்மி விலையில் ஒரு நல்ல 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த டிவியை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications








